யோ.கலைவாணி, மு.ஜெயசீலன் (இதழாசிரியர்கள்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 6: எஸ். பிரின்ட்).
(14), 176ூ(18) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.
இம்மலரில் சைவமும் தமிழும் என்னும் கருத்துநிலை, சோழர்காலத் தமிழ் இலக்கிய வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பமும் தமிழும், முருக வழிபாட்டில் மறுமலர்ச்சி, புலம்பெயர் கவிதைகளில் உணர்வுநிலைப் போராட்டங்களும் அகதி நிலைச் சித்திரிப்பும், பக்தி இலக்கியத்தில் பெண் பக்தி: ஆண்டாளின் பாடல்களை முன்வைத்து சில குறிப்புகள், மலையகக் கவிதை வளர்ச்சி: விரிவுபெற வேண்டிய எல்லைகள், முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் பாரம்பரியக் கலை இலக்கியங்கள்: 1990 வரையிலான கண்ணோட்டம், ஆனந்தமயிலின் படைப்புலகம், பாஞ்சாலி சபதம்: ஒரு மீளாய்வு, அகலிகை ஒரு வரலாற்றுப் படிமம், தமிழ்மொழியில் ஐந்திலக்கண மரபு, மஹாகவியின் நவீன காவியங்களில் இன்னல், உழைப்பு, ஏழ்மை, உயர்வு, ஈழத்தின் கவிப்பரப்பில் தேசியத்தின் குரல், தமிழ்க் கவிதையில் பெண்ணியம், ஈழத்து நவீன தமிழ்க் கவிதையின் மூலங்கள், ஜெயகாந்தன் சிறுகதைகள்: சில குறிப்புகள், தீமைகள் ஒழிக்கவும் அறத்தை நிலைநாட்டவும் எழுந்த காப்பியமே கம்பராமாயணம், ஊடக ஒழுக்கவியல், சேது சமுத்திரத் திட்ட மர்மங்கள்: நெடுந்தீவு தொடர்பிலான புலன் விசாரணை, தீவிரவாதப் புவியியலுக்கான அறிமுகம், அட்லாண்டிக்கின் பெர்முடா முக்கோணம்: ஆழ்கடல் மர்மங்கள், உலக நிதி நெருக்கடியும் இலங்கைப் பொருளாதாரமும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்களின் வகிபாகம், இஸ்லாமும் மனித உரிமைகளும்: ஓர் இஸ்லாமியச் சட்டவியல் நோக்கு, அமுக்கக் குழுக்கள், சர்வதேச சட்டத்தின் கீழ் நாடொன்று அங்கீகரிக்கப் படுவதற்கான தேவைப்பாடுகள், சட்டம் பற்றிய பல்பக்கப் பார்வை, இலங்கையும் நிலைத்திருக்கக்கூடிய சமாதானமும், உலக சமாதானத்தைப் பேணுவதில் ஐக்கிய நாடுகள் சபை, மொழி-பிராந்தியம்-தேசியம்: இலங்கையில் தமிழ்த் தேசியத்தைக் கட்டமைத்தல், இலங்கையின் இன முரண்பாட்டில் தமிழ்நாட்டின் வகிபங்கு, இலங்கையில் தமிழ்த் தேசியவாதம் மற்றும் சிங்களத் தேசியவாதம்: எழுச்சியும் போக்குகளும், சமுதாய மேம்பாட்டில் சமூக அணிதிரட்டலின் பங்கு, பெருந்தோட்டத்துறையில் வறுமை: ஒரு நோக்கு, இலங்கையில் பால்நிலைப் பாகுபாடு, மலையக சிறார்களின் சிறைகளாக பிள்ளைப் பராமரிப்பு நிலையங்கள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளும், இனியொரு பொழுது, தீ எரிகின்ற தேசம், வேதனம் மட்டும், விதி வரைந்த பாதை வழியே, செக் பொயின்ற், அவள், முடிச்சுமாறி ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட சில ஆக்க இலக்கியங்களும் இம்மலரை அலங்கரிக்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 55575).