12372 – கலாசுரபி: தூண்டல்-02, துலங்கல்-12.

மலர்க்குழு. யாழ்ப்பாணம்: தேசிய கல்வியியற் கல்லூரி, கோப்பாய், 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

ix, 140 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ.

கல்லூரி கீதம், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி பீடாதிபதி S.k. யோகநாதன் அவர்களின் அறிக்கை, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி ஆரம்பித்த காலத்திலிருந்து பயிற்சி பெற்று வெளியேறிய முகிழ்நிலை ஆசிரியர்கள் விபரம் ஆகிய ஆரம்ப அறிக்கைகளைத் தொடர்ந்து, ஆசிரியர் கல்வியிலிருந்து ஆசிரியர் அபிவிருத்தி நோக்கிய செயலாற்றுகைகள் (ளு.மு.யோகநாதன்), அதிபரின் வேலைப்பகிர்வும் ஆசிரியரின் ஊக்குவிப்பும் (S.அமிர்தலிங்கம்), பாடசாலையில் மாணவர்கள் கற்றலின் தாக்கத்தினை ஏற்படுத்தும் நெறிபிறழ்வுச் செயற்பாடுகள் (ஜெயமலர் தியாகலிங்கம்), தொடர்பாடல் (மேடை நாடகம்) (த.திலகநாதன்), விசேட தேவையுடைய பிள்ளைகளினதும் விசேட சூழலில் வைக்கப்பட்ட 370.05 கல்விநிறுவனங்களின் ஆய்விதழ்கள், ஆண்டு மலர்கள்212 நூல் தேட்டம் – தொகுதி 13 பிள்ளைகளினதும் உரிமைகள் (த.சிவகுமார்), இனிதாய் வாழ்வோம் (க.இ.கமலநாதன்), UNESCO Strategy on Teachers (2012 – 2015), இலங்கையில் கட்டாயக் கல்வி (டீ.பாலகணேசன்), ஆசிரியத்துவத்தின் வெற்றிக்கு பங்களிப்பு செய்வதில் முக்கியத்துவம் பெறும் பிள்ளை வளர்ச்சியும் அதன் பருவங்களும் (ஜானகி தர்மசீலன்), பேராசான் கலாகீர்த்தி பேராசிரியர் சி.தில்லைநாதன் அவர்களின் பணிகளின் பயன்கள் : பவள விழா நினைவுக்கட்டுரை (முருகேசு கௌரிகாந்தன்), பாடசாலை மாணவர்களிடையே மிருது திறன்களை விருத்தி செய்வதன் முக்கியத்துவம் (க. பஸ்கரன்), யாழ்ப்பாணக் கோட்டையில் போர்த்துக்கேயர் காலத்துக்கு முற்பட்ட இந்து ஆலயங்களின் சிதைவுகள் (நடேசபிள்ளை ஞானவேல்), சிறுநீரகங்களுக்கு ஓய்வளிக்காதீர்கள், சூழல் மாசடைதல், கையடக்கத் தொலைபேசியால் பாதிப்பு, விஞ்ஞானத்தின் விந்தை, கல்லூரி வசந்தம், பாடசாலையில் நடனக்கலை, Youth Unrest இலக்கு எம் வாழ்வின் உயிரோட்டம் (பா.தமிழினி), ஆசிரியம் (ஆன் அன்ரனி கணேஸ்), கல்வி (நாகராசா பத்மராஜ்), பரத நாட்டியத்தில் நட்டுவாங்கமும் அதன் நுட்பவியலும் (புவனேந்திரன் கோபிநாத்), இஸ்லாத்தின் பார்வையில் கல்வியின் முக்கியத்துவம் ஆகிய ஆசிரிய மாணவர்களின் ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 014341).

ஏனைய பதிவுகள்