12373 – கலாசுரபி: தூண்டல்-02, துலங்கல்-13.

மலர்க்குழு. யாழ்ப்பாணம்: தேசிய கல்வியியற் கல்லூரி, கோப்பாய், 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

ix, 171 பக்கம், 12 புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ.

கோப்பாய் பிரதேசத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல் லூரி நிர்வாகத்தினரால் 13ஆவதுஆண்டாக வெளியிடப்படும் ஆண்டிதழ். ஆசிரியர் தொழில்வாண்மை விருத்தியில் அதிபரின் வகிபாகம், நட்புக்கொள்ள வைப்பதற்கான விதிகள், சமூக ஒருங்கிசைவு நோக்கி கல்வியை முகப்படுத்தல், ஆசிரிய வாண்மைத்துவம் சமகால எதிர்பார்ப்புகளும் வாய்ப்புகளும், வருக வண்ண அமிர்தமே வளர்க வளமிகு மகுடமே, நூற்றாண்டு காணும் பண்டிதர், பேராசிரியர், டாக்டர் கா.பொ.இரத்தினம் அவர்களின் வாழ்வும் பணிகளும், கல்லூரிக் காலங்கள், தமிழ் மரபில் மாணவர் ஒழுக்க விழுமியங்கள், ஆசிரியரும் தலைமைத்துவமும், வகுப்பறைக் கற்றல்-கற்பித்தலில் ஊக்கல் உபாயங்கள், நனோ தொழில்நுட்பமும் வளர்ச்சியும், விசேட கல்வி அலகின் நோக்கங்களும் முக்கியத்துவமும் பயன்பாடும், பெரியோர் சொற்கேட்போன் (சிறுவர் நாடகம்), மாணவர் உளநலம் பேணுதல் அணுகுமுறை, உட்படுத்தல் கல்வியும் பிரயோகங்களும், நித்தமும் கைதொழுவேன், மனிதம், சினத்தின் குணம், ஈழத்தமிழர் பிரச்சினைக்குப் புலம்பெயர்தல் தீர்வாகுமா?, தகவல் தொழில்நுட்பம் பற்றிய அடிப்படை எண்ணக்கருத்துக்கள், தற்காலத்தில் பன்மொழியாற்றலின் தேவை, தாயே, மகத்தான பணியின் பயன், கைத்தொலைபேசி சில ஆபத்துக்கள், தமிழின் மகத்துவம், ஈஸ்டர்தீவு சிலைகளின் இரகசியம், நம்பிக்கை என்னும் சக்கரமே வாழ்க்கை, என் பெயர் என்ன? (கதை), எதிர்கால தலைமையை ஏற்கும் இளம் சமுதாயத்தவர்கள் கொண்டிருக்கவேண்டிய குணநலவியல்புகள், முகாமைத்துவ விஞ்ஞான அணுகுமுறை, கல்லூரி தோழியே உனக்கு என் நட்பின் வரிகள், இணையம் பற்றிய தகவல்கள், கல்லூரிச் சாலையிலே, அன்னையர் தினத்தின் ஆரம்பம், காத்திருப்புகளோடு, ஆதிமூலத்தின் ஓவிய வெளிப்பாடு, பாடசாலையும் வழிகாட்டல் ஆலோசனையும், அழுத்தங்கள் நிறைந்த பிரதேசத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களும் உளப்பாங்கும், வெற்றிகரமான வகுப்பறைக் கற்றல் கற்பித்தலில் ஆசிரியரின் வகிபாகம், சந்நிதியும் எம் சந்ததியும், சிறுவர் நட்புறவுப் பாடசாலை, இலங்கையில் ஆசிரியர் கல்வியை வழங்குவதில் தேசிய கல்வியியற் கல்லூரிகளின் வகிபாகம் ஆகிய படைப்பாக்கங்களுடன் கல்லூரியின் பல்வேறு மன்றங்களின் ஆண்டறிக்கைகளும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54647).

ஏனைய பதிவுகள்

Summer Slot remark out of MicroGaming

Getting about three or maybe more Scatters anywhere to your https://vogueplay.com/in/turn-your-fortune-slot/ reels causes it enjoyable element. Through the Free Spins, You will find knowledgeable improved