12379 – கூர்மதி (மலர் 3): 2005.

எஸ்.சிவநிர்த்தானந்தா (பதிப்பாசிரியர்), திருமதி ஜீ. தெய்வேந்திரராசா, பி.இராசையா (உதவிப் பதிப்பாசிரியர்கள்). பத்தரமுல்ல: தமிழ் மொழி அலகு, கல்வி அமைச்சு, இசுறுபாய, 1வது பதிப்பு, 2005. (கொழும்பு: தீபானி பிரின்டர்ஸ் பிரைவேட் லிமிட்டெட், நுகேகொடை).

xviii, 260 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ.

கல்விப் பொதுத் தராதர உயர் மட்டப் பரீட்சையில் தமிழ்ப் பாடத்துக்கு வேண்டும் அறிவாழமும் அதற்கான பாடத்திட்டமும் (கார்த்திகேசு சிவத்தம்பி), தமிழகத்தில் பக்தி இயக்கம்: தோற்றமும் வளர்ச்சியும் (அ.சண்முகதாஸ்), அபிவிருத்தி அடைந்த நாடுகளும் இலங்கை பொருளாதாரத்தில் அவற்றின் பங்களிப்பும் (வி. நித்தியானந்தன்), தமிழ்த் திறனாய்வு மரபு உருவாக்கம் பேராசிரியர் ச.வையாபுரிப் பிள்ளையின் வகிபாகம் (வீ.அரசு), தமிழ் மக்களின் வாழ்வியலிற் பனை (எஸ். சிவலிங்கராஜா), செம்மையின் திருவடித்தலம் (மனோன்மணி சண்முகதாஸ்), தலைவன் தலைவி பாவ தமிழ்ப் பதிகங்களும் பதங்களும் (சுபாஷிணி பார்த்தசாரதி), கம்பன் என்றொரு மகாகவி (துரை.மனோகரன்), ஈழத்தில் தமிழ் நாவல்: தோற்றமும் தொடர்ச்சியும் (மயில்வாகனம் இரகுநாதன்), சுவாமி விபுலானாந்தரது ஆய்வறிவுப்புலம் (வ.மகேஸ்வரன்), 21ம் நூற்றாண்டில் இசை உலகில் பெண்மணிகள் (டி.கே.பட்டம்மாள், எம்.ஏ.பாகீரதி), மொழிபெயர்ப்பு (செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்), மட்டக்களப்பில் சிதைந்து வழங்கும் தமிழ்ச்சொற்கள் (புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை), சான்றோர் பலர் யான் வாழும் ஊரே (தங்கம்மா அப்பாக்குட்டி), பாதீட்டுக் கட்டுப்பாடு (ரதிராணி யோகேந்திரராஜா), ஆலயங்களில் இசை (மீரா வில்லவராயர்), மொழித் தேர்ச்சிக்கு வாசிப்பின் அவசியம் (புண்ணியேஸ்வரி நாகலிங்கம்), இலங்கைப் பல்கலைக்கழகம்: ஓர் வரலாற்று நோக்கு (எப்.எம்.நவாஸ்தீன்), இலங்கையின் பொருளாதாரத்தில் எண்ணெய் விலையதிகரிப்பின் தாக்கங்கள் (சிவசுப்பிரமணியம் சிவநேசன்), 370.05 கல்விநிறுவனங்களின் ஆய்விதழ்கள், ஆண்டு மலர்கள்நூல் தேட்டம் – தொகுதி 13 219 பாலைவனத்தில் ஒரு பசுந்தரை: ஜீலியஸ் பூசிக்கின் ‘தூக்கு மேடைக்குறிப்பு” (லெனின் மதிவானம்), புற்றுநோயையும் வெற்றி கொள்ளலாம் (சிவப்பிரகாசம் அனுஷ்யந்தன்), சூழல் பாதுகாப்பும், வீடுகள் / கட்டடத்தொகுதிகளில் இருந்து கழிவு நீர் சேகரித்தலும் வெளியகற்றுவதும் (சி.ரவிச்சந்திரன்), பாடசாலை மாணவர்களுக்கான பற் சுகாதாரம் (பிரியந்தி சண்முகலிங்கம்), பாடசாலை நூலகமும் தகவலியலும் (ச.ஜேசுநேசன்), தாயுமானவர் சுவாமிகள் எமக்குத் தந்த சைவ சித்தாந்த தத்துவம் (நா.சிதம்பரநாதர்), ‘நாளைக்கு ஆசிரியர் தினமாம்” (திக்குவல்லை கமால்), மானக் கயிறு (நடராஜா கணேசலிங்கம்), மட்டக்களப்பு தமிழகத்தில் நாட்டுக்கூத்துக் கலை (கு.சண்முகம்), அரக்கத்தனத்திற்குள்ளும் கம்பர் காட்டமுனைந்த மனித நேயம்: கும்பகர்ணன் பற்றிய ஒரு ஆய்வு (ச.கு.கமலசேகரன்), ஆறுமுகம் தந்த தேறு தமிழ்ச் சைவம் (இணுவை. ந. கணேசலிங்கம்), பேச்சு மொழியும் எழுத்து மொழியும் (க.குணசேகரம்), பல்லவர் கால கலை இலக்கிய இயக்கம் (பெ.பேரின்பராஜா), மெல்லத் தமிழினி….. (ஜின்னாஹ் ஷரிபுத்தீன்), தெய்வீகக் கலைகள் (க.சுந்தரலிங்கம்), விஜய நகர நாயக்கர கால இலக்கியப் பண்பு (சுலோஜனா சகாதேவன்), கிறிஸ்துவுக்கு முன் இருந்த கீழைத்தேய இசை வரலாற்றின் ஒரு கண்ணோட்டம் (ஞான குமாரி சிவநேசன்), ஆசிரியர் (யு.று.வதூத் சியாம்), இலங்கை இந்திய பின்னணியில் சேது சமுத்திரத் திட்டம் ஒரு கண்ணோட்டம் (சிவசுப்பிரமணியம் சிவசங்கர்), விந்தை மிகு தாவரங்கள் (பொன்னையா அரவிந்தன்), கல்வியின் புதிய எண்ணக் கருவும் தமிழ் இணையப் பயன்பாடும் (சிவரஞ்சினி சிவப்பிரகாசம்), ‘வாப்பா அறிஞ்சாரெண்டால் வாளேடுத்து வீசிடுவார்”: நாட்டார் இலக்கியம் (எல்.ரீ.எம். சாதிக்கீன்), ஈழத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மட்டக்களப்பின் பங்களிப்பு (கி. சண்முகநாதன்), சமுதாய மைய கல்வியில் அவசியமாகும் ‘சூழலியல் கற்கை நெறி” (பரராஜசிங்கம் இராஜேஸ்வரன்), நாட்டார் பாடல்கள் (வயலற் சந்திரசேகரம்), வித்துவான் பூபாலபிள்ளையின் தமிழியற் பணிகள் (நளினா ஸ்ரீதரன்), கண்ணீரைக் காவுகொண்ட கடலலைகள் (எஸ்.கே.ஆப்தீன்), சிலப்பதிகாரத்தில் தமிழர் கலைகள் (சித்திராஞ்ஜனி இராஜவரோதயம்), சுற்றாடலை அச்சுறுத்தும் பொலித்தீன் பாவனை (ரி.நகுலேசபிள்ளை), மந்திரமா? தந்திரமா? மருந்தா? (ஆறுமுகம் அரசரெத்தினம்), இருப்பின் முற்றுப்புள்ளி (மு.பஷீர்), பொறாமையெனும் பெரும் தீ (பருத்தியூர் பால.வயிரவநாதன்), அரங்க நாடகமும் நாமும் (யு.ளு.ஆ.பீலிக்ஸ்), தனித்தமிழ் இலக்கியம் (க.இதயவேணி), தமிழ் பேசும் சமூகங்களின் உறவும் தமிழ் ஊடகங்களின் கடப்பாடும் (முனையூரான்), கண்ணீரில் கரையும் காவியங்கள் (மண்டூர் மீனா), பூவே பூச்சூடவா (இந்திராணி வரதநாதன்), எம்மவர் வரலாறு (சு.விசாகன்), நிதர்சனச் சித்தன் மகாகாவி பாரதி (மகாதேவன் வாகேஸ்வரி), குருதட்சணை (சி.செந்தூர்), திருக்குறளின் பெருமை (ஏ.மஞ்சுளா), அன்னையும் பிதாவும்….. (சங்கவை சிவநிர்த்தானந்தா), இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள் ஆவர் (ப.லியோ கொட்ஸி), பத்திரிகைகள் (அருண்யா சபாரஞ்சன்) ஆகிய படைப்பாக்கங்கள் இம்மலரை அலங்கரிக்கின்றன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 008457).

ஏனைய பதிவுகள்

14638 புலமையும் வறுமையும்.

குலசேகரம் கமலேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). தெல்லிப்பழை: கு.கமலேஸ்வரன், துர்க்காபுரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சுன்னாகம்: மகிந்தன் கணனி அச்சகம்). 150+84 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17 சமீ. தெல்லிப்பழை துர்க்கையின்

13018 காலம்: கவிஞர் செழியன் சிறப்பிதழ்.

செல்வம் அருளானந்தம் (இதழாசிரியர்). கனடா: செல்வம் அருளானந்தம், காலம், 84Coleluke Lane, Markham, Ontario, L3S 0B7, 1வது பதிப்பு, ஜுன் 2019. (இந்தியா: சென்னை 600 087: வீ.ஆர்.கிராப்பிக்ஸ், வளசரவாக்கம்).128 பக்கம், புகைப்படங்கள்,