12381 – கூர்மதி (மலர் 5): 2011.

கிறேஸ் சடகோபன் (பதிப்பாசிரியர்). பத்தரமுல்ல: தமிழ் மொழி அலகு, கல்வி அமைச்சு, இசுறுபாய, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு: அரசாங்க அச்சகத் திணைக்களம்).

xvii, 255 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ.

கூர்மதி இதழ் வருடந்தோறும் தேசிய மொழிகள் மற்றும் மானுடவியல் பிரிவின் தமிழ்மொழி அலகுக்கான கல்வி அமைச்சின் வெளியீடாக வெளிவருகிறது. கல்வி சார்ந்த ஆக்கங்களைத் தாங்கி இந்த இதழ் வெளிவருகிறது. செம்மொழி வரையறைகளும் தமிழும் (கார்த்திகேசு சிவத்தம்பி), புதிய அறிவுப் பிரவாகமும் வாசிப்புப் பண்பாடும் (சோ.சந்திரசேகரன்), சமகாலத்து ஆக்க மலர்ச்சி ஆய்வுகளும் 370.05 கல்விநிறுவனங்களின் ஆய்விதழ்கள், ஆண்டு மலர்கள்222 நூல் தேட்டம் – தொகுதி 13 மறுமதிப்பீடும் (சபா ஜெயராசா), கற்பித்தலுலகமும் பட்டெறிக்கைக் கலாச்சாரமும் (க.முரளிதரன்), கவிஞர் சி.வி.யின் இலக்கிய நோக்கு காலமும் கருத்தும் (லெனின் மதிவானம்), கண்ணிவெடி அனர்த்தம் பற்றிய அறிவு அனைவருக்கும் அவசியம் (இஸட்.தாஜூதீன்), தேசவழமைச் சட்டத்தின் ஏற்புடமை (எஸ்.சந்திரராஜா), இசையின் முப்பரிமாணம் ஒரு சமுதாய நோக்கு (தம்பு சிவசுப்பிரமணியம்), அன்னைத் தமிழ் (ஜின்னாஹ் ஷரிபுத்தீன்), வரால் மீன்கள் (எம்.எஸ்.அமானுல்லா), இயங்கியல் பொருள் முதல் வாதம் (ந.இரவீந்திரன்), உயிர்க்குறியின் உயிர்ப்பு (நா.பார்த்தீபன்), கல்வியின் சமூகப் பயன் (சி.சிவசேகரம்), முன்பள்ளிகளின் மகிழ்நிலைக் கற்றலுக்குதவும் இயற்கைவாதச் சிந்தனைகள் (எம்.மூவேந்தன்), நாயன்மார் பாடல்களில் முற்போக்கு சிந்தனைகள் (அ.வைத்திலிங்கம்), இலங்கையில் வேலையில்லாப் பிரச்சினைகள் பற்றிய சமூகவியல் பார்வை (மோ. ஜெனிதா), வகுப்பறையின் அமைப்பும் இயங்கியல் தன்மையும் (சரவணமுத்து கணேசமூர்த்தி), நவீன யுகத்தில் எழுத்தறிவுத் திறனுக்கப்பால் வலியுறுத்தப்படும் தகவல் தொழில்நுட்பக் கலாசாரம் (சிவசித்ரா பழனி), எயிட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய் (ஜெயபிரியா ஜெகதீஸ்வரன்), மனம் எனும் மாயசக்தி (பாலவைரவநாதன்), இலங்கையில் கவிதை பற்றிய ஒரு நோக்கு (யு.ளு.ஆ. பீலிக்ஸ்), ஊவாவில் இலக்கியம் வளர்த்த பாமுதலோன் தமிழோவியன் (பூனாகலை நித்திய ஜோதி), கலாநிதி ம.மு.உவைஸ் அவர்களின் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பணி பற்றிய கண்ணோட்டம் (எம்.எம்.முகம்மது சப்ரி), விளம்பரமின்றேல் விற்பனையில்லை (வயலற் சந்திரசேகரம்), பாரதியின் குயிற்பாட்டு ஒரு நோக்கு (ந.தேவராசா), கல்வியின் மூன்று படிநிலைகளும் பிள்ளையின் கல்வி நிலைகளும் (சரவணமுத்து நவேந்திரன்), இந்து நாகரீக மரபில் சிற்பக்கலை (இராஜினிதேவி சிவலிங்கம்), தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்ககாலம் (சுதேஷணா சோதிலிங்கம்), இறைவாக்குப் பெற்ற அருள் வாக்கி (சாந்தி முஹியத்தின்),ஆசிரிய வாண்மையில் ஆசிரியர் தேர்ச்சியின் பங்களிப்பு (குணசிங்கம் பிரதீபன்), குழந்தைகள் தொடர்பாக பத்து முதுமொழிகள் (ஷ.அமனஷ்விலி), சமத்துவமாய் வாழ வழிகாண வேண்டும் (கி.குலசேகரன்), தெற்காசிய நாடுகளின் கல்வி நிலை (சுதாகரி மணிவண்ணன்), ஒன்றிணைவோம்: ஒருகையாய் ஒன்றித்து பார்ப்போம் (க.பாலகௌரி), இலக்கியம் நயத்தல் (எம்.ஏ.எப்.சுமையா), பாடசாலைகளில் மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி வழங்கப்படுவதன் முக்கியத்துவமும் நிருவாக பங்களிப்பின் அவசியமும் (எ.எல்.மன்சூர்), மூளையை வடிவமைத்து வளர்த்தெடுப்பது சாத்தியமா? (இரா. சடகோபன்), கல்வியும் மாணவர் இடை விலகலும் ஓர் பொது நோக்கு (நிலாந்தி ரவிச்சந்திரன்), தற்கொலை பிரச்சினைக்கு தீர்வாகி விடுமா? (எம்.எச். எப்.ஹ_ஸ்னியா), காலம் ஒரு நாள் மாறும் (ஆர்.மைதிலி), சங்க இலக்கியங்களில் அகத்திணை ஒழுக்கம் (யு.டு.பாத்திமா றிஸ்னா), திறனாய்வு (ரி.நஜ்பா), முயற்சி திருவினையாக்கும் (எம்.ஏ.எப்.அஷ்ரபா), நாமும் நவீன தொலைபேசிகளும் (ஆர். உமையாளினி), கற்றாங்கு ஒழுகுவோம் (எஸ்.அனந்ததர்வின்), இன்பத் தமிழே (என்.சதுஜா), விஞ்ஞானமும் இன்றைய உலகமும் (எம்.என்.சஸ்னா பர்வின்), தமிழுக்கு எத்தனை அடைமொழிகள் (தமிழ்மணி அகளங்கன்) ஆகியஆக்கங்களை இம்மலர் கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37718. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 014484).

ஏனைய பதிவுகள்

12150 – திருவாசக ஆராய்ச்சியுரை: முதலாம் பாகம்.

சு.அருளம்பலவனார் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: அ.சிவானந்தநாதன், காரைநகர், 1வது பதிப்பு, 1967. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்). (16), 480, ix பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13 சமீ. மணிவாசகர் அருளிச் செய்த

Использование карты с плохой кредитной историей

Содержание статей Какая именно открытка? Учитывая разнообразие работы кредитных карт? Если у вас плохая кредитная история, использование поздравительной открытки может оказаться затруднительным.

13A22 – பிரதேச வரலாற்று மூலங்கள்: ஒரு நூல்வழித் தேடல்: தீவகம்.

என்.செல்வராஜா. லண்டன்: யாழ்.தீவக ஒன்றியம், பிரித்தானியா, 2வது பதிப்பு, மே 2018, 1வது ஜேர்மன் பதிப்பு, செப்டெம்பர் 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). v, 129 பக்கம்,