கா.இந்திரபாலா (பதிப்பாசிரியர்). பேராதனை: சிந்தனை வெளியீடுகள், பேராதனைக் கலைக் கல்விக் கழகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1967. (கண்டி: செய்தி அச்சகம், 241, கொழும்பு வீதி).
48 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 1., அளவு: 24×18 சமீ.
சிந்தனை இதழ் பேராதனை வளாக, கலைக் கல்விக் கழகத்தால் வெளியீடு செய்யப்பட்டது. இதன் ஆசிரியராக கா.இந்திரபாலா விளங்கினார். மொழியியல், அரசியல், பொருளியல், இலக்கியம், வரலாறு, தொல்பொருளியல் சார்ந்த ஆக்கங்கள் இதில் இடம் பெற்றிருந்தன. சிந்தனை இதழின் முதலாவது பிரசுரம் இதுவாகும். இவ்விதழில் புறநானூற்றில் நிலையாமை (ஆ.வேலுப்பிள்ளை), கலிங்கர் ஆட்சிக்காலம் (ஸிரிமா கிரிபமுண), சமுதாயவியல் முன்னோடி கார்ல் மார்க்ஸ்(முஹம்மது மவ்ரூப்), இலங்கையில் மழைவீழ்ச்சியின் அரும்போக்குகள் (தம்பையாப்பிள்ளை), இலங்கையில் ஒல்லாந்தர் பின்பற்றிய சமயக் கொள்கை (க.அருமைநாயகம்), பிராமண மதத்தின் செல்வாக்கினைப் பிரதிபலிக்கும் பௌத்த விக்கிரகங்கள் (எல்.பிரேமதிலக்க), நாட்டுப் பாடல்கள் (க.கைலாசபதி) ஆகிய ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.