12387 – சிந்தனை: மலர் 1 இதழ் 3 (ஒக்டோபர் 1967).

கா.இந்திரபாலா (பதிப்பாசிரியர்). பேராதனை: சிந்தனை வெளியீடுகள், பேராதனைக் கலைக் கல்விக் கழகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1967. (கண்டி: செய்தி அச்சகம், 241, கொழும்பு வீதி).

(4), 65 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 1., அளவு: 24×18 சமீ.

இவ்விதழில் கல்வித் தத்துவமும் இலட்சியவாதமும் (ப.சந்திரசேகரம்), திருக்குறள்- ஒரு கண்டன நூல் (ஆ.வேலுப்பிள்ளை), 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானியாவின் கடல்கடந்த முதலீடுகள் (செல்வரத்தினம் ராஜரத்தினம்), மறைமலை அடிகளின் இரு நாவல்கள் (க.கைலாசபதி), நிஸ்ஸங்கமல்ல -கலிங்கர் ஆட்சிக்காலம் III (ஸிரிமா கிரிபமுண), இலங்கை நகரவிருத்தியில் ஏற்பட்டுவரும் சில மாற்றங்கள் (பீ.எல்.பண்டிதரத்ன), இலங்கைப் பாராளுமன்ற நிறுவனங்களினது செயற்பாட்டை நிர்ணயிக்கும் காரணிகள் (ஏ.ஜே.வில்சன்), இலங்கையில் சனத்தொகைக் கட்டுப்பாடு (சீ.எச்.எஸ்.ஜயவர்த்தன), நூல் விமர்சனம்: பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் (எம்.மவ்ரூப், க.அருமைநாயகம், இ.முருகையன்) ஆகிய கட்டுரைகளுடன் ஆசிரியரால் தொகுக்கப்பட்ட அறிவியல் நிகழ்வுகளின் குறிப்பும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்