கா.இந்திரபாலா (பதிப்பாசிரியர்). பேராதனை: சிந்தனை வெளியீடுகள், பேராதனைக் கலைக் கல்விக் கழகம், 1வது பதிப்பு, ஜுலை 1969. (கண்டி: நேஷனல் பிரின்டர்ஸ், 241, கொழும்பு வீதி).
(2), 52 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 1.50, அளவு: 24.5×18 சமீ.
இவ்விதழில் மலேசியாவில் கலிங்கம் (கா.இந்திரபாலா), தென்கிழக்காசியாவுடன், சிறப்பாகப் பர்மாவுடன், இலங்கையின் தொடர்புகள் (ஸி.கிரிபமுண), சோதனை முறையால் நீதியுணர்த்தல் (சி.ஆர்.ஸ்ரீனிவாசன்), யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுக்கள் (கா. இந்திரபாலா) ஆகிய ஆய்வுக் கட்டுரைகளும் ஆசிரியரால் தொகுக்கப்பட்ட அறிவியல் நிகழ்வுகளின் குறிப்பும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 000697).