கா.இந்திரபாலா (பதிப்பாசிரியர்), பி.ஏ.ஹ{சைன்மியா (துணைப் பதிப்பாசிரியர்). பேராதனை: சிந்தனை வெளியீடுகள், பேராதனைக் கலைக் கல்விக் கழகம், 1வது பதிப்பு, ஜுன் 1972. (கண்டி: நேஷ னல் பிரின்டர்ஸ், 241, கொழும்பு வீதி).
(4), 42 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 2., அளவு: 24.5×18 சமீ.
இவ்விதழில் இலங்கையின் 19ம் நூற்றாண்டுப் பொருளாதார வளர்ச்சியிற் சிறுபயிர்க் கோப்பிச் செய்கையின் வரலாறும் பங்கும் (ஏ.சி.எல்.அமீர் அலி), விளிப்பெயர் விளக்கம் (அ.தாமோதரன்), யாழ்ப்பாணத்தரசருடைய கொடிகளிலும் நாணயங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ள இலச்சினை (கா. இந்திரபாலா) ஆகிய ஆய்வுக் கட்டுரைகளும், செய்தியும் குறிப்பும் என்ற பகுதியில் ஆசிரியரால் தொகுக்கப்பட்ட அறிவியல் நிகழ்வுகளின் குறிப்பும் இடம்பெற்றுள்ளன.