அ.சண்முகதாஸ் (இதழாசிரியர்), ஆ.சிவநேசச்செல்வன் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: மனிதப் பண்பியற் பீடம், இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, தை 1976. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம், பிரதான வீதி).
(7), 68 பக்கம், விலை: ரூபா 20.00, அளவு: 24.5×18.5 சமீ.
சிந்தனை இதழ் பேராதனை வளாக, கலைக் கல்விக் கழகத்தால் வெளியீடு செய்யப்பட்டது. அறுபதுகளின் பிற்பகுதியிலும் 70களின் ஆரம்பத்திலும் இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியராக கா.இந்திரபாலா விளங்கினார். மொழியியல், அரசியல், பொருளியல், இலக்கியம், வரலாறு, தொல்பொருளியல் சார்ந்த ஆக்கங்கள் இதில் இடம் பெற்றிருந்தன. யாழ்ப்பாண வளாகம் ஆரம்பிக்கப் பட்டபின்னர் ‘சிந்தனை” யாழ்ப்பாண வளாகத்தினரால் பொறுப்பேற்கப்பட்டது. தை 1976இல் வெளிவந்த அதன் முதலாவது இதழ் இதுவாகும். இதில் இயற்கை உரிமைகளும் மனித உரிமைகளும் (சோ.கிருஷ்ணராஜா), பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடகங்களிற் சமூக நோக்கு (துரை மனோகரன்), இலங்கையில் உணவு உற்பத்தியும் ஆற்று வடிநில விருத்தியும் (இ.மதனாகரன்), ஈழத்து நாவல்களிற் சமூக உணர்வின் தோற்றம் (சித்திரலேகா மௌனகுரு), வடமொழிச் சாசனமும் தமிழ்ச் சாசனமும் (வி.சிவசாமி), கவிஞரும் மொழியும்- ஒரு மொழியியல் நோக்கு (அ.சண்முகதாஸ்), கலைப்படைப்புகள் பற்றிய கருத்துரை (சு.கம்லத்), தகவல்: 1970க்குப் பின்னர் ஈழத்தில் வெளிவந்த தமிழ் நாவல்கள் (நா.சுப்பிரமணியம்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20945. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 048121).