12394 சிந்தனை: தொகுதி I இதழ் 2 (சித்திரை 1976).

அ.சண்முகதாஸ் (இதழாசிரியர்), ஆ.சிவநேசச்செல்வன் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: மனிதப் பண்பியற் பீடம், இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1976. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம், பிரதான வீதி).

(6), 75 பக்கம், விலை: ரூபா 20.00, அளவு: 24.5×18.5 சமீ.

இவ்விதழில் இலக்கியத்திறனாய்வும் உணர்வு நலனும் (க.கைலாசபதி), பொருளியலிற் பொதுக் கொள்கையின் முக்கியத்துவம் (ந.பேரின்பநாதன்), மானிடவியலும் ஆக்க இலக்கியமும் (க.சண்முகலிங்கம்), இலங்கையின் ஆதிப் பிராமிக் கல்வெட்டுக்கள் காட்டும் இந்து மதம் (சி.க.சிற்றம்பலம்), வேற்றுமையும் சொல்லொழுங்கும் (யோகேஸ்வரி கணேசலிங்கம்), இலங்கையும் இந்து சமுத்திர வர்த்தகமும்: கி.மு. 2ம் நூற்றாண்டு முதல் கி.பி. 13ம் நூற்றாண்டு வரை (ச. சத்தியசீலன்) ஆகிய ஆய்வுக்கட்டுரைகளுடன், தென்னாசியாவியற் கருத்தரங்கக் கட்டுரைகளான 1970க்குப் பின் ஈழத்து தமிழ் நாவல்கள் (நாகராஜஐயர் சுப்பிரமணியம்), சைவ சித்தாந்த அறிவுக் கொள்கை – காட்சி (சோ.கிருஷ்ணராஜா), பிரதேச நாவல்கள் – யாழ்ப்பாணப் பிரதேச நாவல்கள் (துரை மனோகரன்), யாழ்ப்பாணத்தில் நூலக வளர்ச்சி (மனோன்மணி சண்முகதாஸ்) ஆகிய நான்கு கட்டுரைகளும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19400. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 000680).

ஏனைய பதிவுகள்