அ.சண்முகதாஸ் (இதழாசிரியர்), ஆ.சிவநேசச்செல்வன் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: மனிதப் பண்பியற் பீடம், இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்கழி 1976. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம், பிரதான வீதி).
63 பக்கம், விலை: ரூபா 20.00, அளவு: 24×18 சமீ.
இவ்விதழில் மலர் 3க்குரிய கட்டுரைகளாக, யாழ்ப்பாண வளாகத்தில் ‘தமிழ் நாவல் நூற்றாண்டு” தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட வங்காள நாவல்கள் தமிழ் நாவல்களில் ஏற்படுத்திய தாக்கம் (செ. யோகராசா), பெண்களும் தமிழ் நாவலும் (மனோன்மணி சண்முகதாஸ்), இரு காந்தீய நாவல்கள் (சோ. கிருஷ்ணராஜா), 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலக் கல்வியும் தமிழ் நாவலின் தோற்றமும் (சாந்தினி சந்தானம்) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மலர் 4இற்குரிய கட்டுரைகளாக மத்தியகாலத் தமிழ்நாட்டு இந்துக் கோவில்கள் – தொழில் நிறுவனங்கள் (செல்லத்துரை குணசிங்கம்), ஞாயிற்றுச் சக்தியும் அதன் சமநிலையும் (அ. கணபதிப்பிள்ளை) ஆகிய இரு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.