சி.க.சிற்றம்பலம் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, கார்த்திகை 1983. (யாழ்ப்பாணம்: மகாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு, ஏழாலை).
(7), 141 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 24.5×17 சமீ.
இந்திய இசை, சமய, இலக்கிய மரபுகளில் ஜயதேவர்-ஓர் ஆய்வு (வி.சிவசாமி), இலங்கையில் உப-உணவுப் பயிர்களுக்காக வணிக வங்கிகளால் வழங்கப்பட்ட கடன் வசதிகள் பற்றிய ஓர் ஆய்வு 1965-1980 (ந.பேரின்பநாதன்), பௌத்தத்துக்கு முந்திய ஈழத்து இந்துமதம் (சி.க.சிற்றம்பலம்), யாழ்ப்பாண நகர நிலப் பயன்பாடு (கே.கே.ஆறுமுகம்), யாழ்ப்பாணக் குடாநாட்டில் கிடைத்த நாணயங்கள் (செ. கிருஷ்ணராஜா), இலங்கையில் கல்வி நிருவாகத்தின் பன்முகப்படுத்தலுக்கான வழிமுறைகள் (தி.வேலாயுதம்), ஈழத்தில் இந்து இலக்கியங்கள்: பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை (கலையரசி சின்னையா), தமிழர் வழிபாட்டில் செவ்வேளும் திருமாலும் (அ.சண்முகதாஸ்), யாழ்ப்பாணப் பகுதியில் மீன்பிடித் தொழில் அபிவிருத்தி (கா.ரூபாமூர்த்தி), ‘அம்பிடு” என்னும் சொல்பற்றி ஒரு குறிப்பு (இரத்தினமலர் கயிலைநாதன்) ஆகிய ஆய்வுக்கட்டுரைகள் இவ்விதழை அலங்கரிக்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 59121).