சி.க.சிற்றம்பலம் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்ச் 1984. (யாழ்ப்பாணம்: மகாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு, ஏழாலை).
(4), 141 பக்கம், விலை: ஆண்டுசந்தா ரூபா 75., அளவு: 24.5×16.5 சமீ.
இவ்வாய்விதழில் இடைநிலைப் பாடசாலைக் கல்வி அனுபவ ஒழுங்கமைப்பின் நவீன வடிவங்கள் (சபா.ஜெயராசா), இசைமேதை பாபநாசம் சிவன் (வி.சிவசாமி), ஈழத்துத் தமிழ்க் கவிதைப் பாரம்பரியம் (கார்த்திகேசு சிவத்தம்பி), இலங்கையின் வன்னிப் பிரதேச விவசாய அபிவிருத்தி (இரா.சிவச்சந்திரன்), ஐந்தாம் வகுப்பு மாணவர் தமிழ்மொழிப் பயிற்சிகளில் சில அவதானிப்புகள் (பார்வதி கந்தசாமி), யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுண்ணாம்புக் கற்பாறைகளை அகற்றுவதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் (இ.மதனாகரன், த.குணசேகரம்), ஈழமும் இந்து மதமும்-அநுராதபுரக் காலம் (சி.க.சிற்றம்பலம்) ஆகிய ஏழு ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.