சி.க.சிற்றம்பலம் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜுலை 1984. (யாழ்ப்பாணம்: மகாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு, ஏழாலை).
(4), 160 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 24.5×17 சமீ.
இவ்வாய்விதழில் பாண்டியர்கால ஆட்சிஇயல் (நடன.காசிநாதன்), யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில் ஆக்கப் பெயர்கள் (சு.சுசீந்திரராஜா), பயிர்ச் செய்கைப் பிரதேசம் ஒன்றில் நீர்ப்பாய்ச்சல் திட்டமிடுதலில் சில முக்கிய அம்சங்கள் (அ. கணபதிப்பிள்ளை), இலங்கைத் தமிழ் வணிக கணங்களும் நகரங்களும்: கி. பி.1000-1250 (சி.பத்மநாதன்), இலங்கையில் முயற்சியாளர் வர்க்க எழுச்சியும் அதன் முதலாளித்துவ இணக்கப்பான்மையும் (வி.நித்தியானந்தன்), ஈழமும் இந்து மதமும்-பொலநறுவைக் காலம்: கி.பி.1000-1250 (சி.க.சிற்றம்பலம்) ஆகிய ஆறு ஆய்வுக்கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23093).