சி.க.சிற்றம்பலம் (இதழாசிரியர்), சி.முருகவேள் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, நவம்பர் 1984. (யாழ்ப்பாணம்: மகாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு, ஏழாலை).
179 பக்கம், அட்டவணைகள், விலை: ஆண்டு சந்தா ரூபா 75. அளவு: 23.5×17 சமீ.
இவ்விதழில் இலங்கையில் தொலைவு நுகர்வு ரீதியான நிலப்பயன்பாட்டு ஆய்வுகள் (செ.பாலச்சந்திரன்), ‘விலாசம்” தமிழ் நாடக வகை ஒன்று பற்றிய ஆய்வு (சி. மௌனகுரு), இலங்கையில் நெல்லிற்கான உத்தரவாத விலைத்திட்டமும் அதன் செயற்பாடும் (ந.பேரின்பநாதன்), குறியீட்டு அளவையியல்: ஓர் அறிமுகம் (சோ. கிருஷ்ணராஜா), இலக்கணக் கொள்கைக் கட்டுரைகளிலே கணேசையரின் அணுகுமுறை (ஆ.வேலுப்பிள்ளை), ஈழமும் இந்துமதமும்: பொலநறுவை அரசுக்குப் பிற்பட்ட போர்த்துக்கேயர் வருகைக்கு முற்பட்ட காலம்: கி.பி.1250- 1505 (சி.க.சிற்றம்பலம்) ஆகிய ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.