12402 – சிந்தனை: தொகுதி III இதழ் 1 (மார்ச் 1985).

சி.க.சிற்றம்பலம் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்ச் 1985. (யாழ்ப்பாணம்: மகாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு, ஏழாலை).(6),

145 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 24×16.5 சமீ.

ஆங்கிலத்தில் தமிழ் அசைகளின் செல்வாக்கு (பார்வதி கந்தசாமி), காரைக்காலம்மையாரும் அவர் பாடிய பிரபந்தங்களும்-ஓர் ஆய்வு (சந்திரலேகா வாமதேவா), இலங்கையில் தேசிய குடிக்கணிப்புகளும் அவற்றின் குறைநிறைகளும் (கா.குகபாலன்), இலங்கைத் தமிழர்-இந்திய வம்சாவளித் தமிழர் இடையிலான உறவுகள் பற்றிய சில கருத்துக்கள் (ச.சத்தியசீலன்), தமிழ் மொழியில் உளப்பாட்டுத் தன்மைப் பன்மை (இரத்தினமலர் கயிலைநாதன்), இலங்கையின் நீர்ப்பாசன அபிவிருத்தியில் வரலாற்றுச் சிறப்பம்சங்கள் (அ.கணபதிப்பிள்ளை), பிரதேச அபிவிருத்திக்கான பொருத்தமான நில வகைப்பாட்டுத் தேர்வு: அளவுசார் ரீதியான அணுகுமுறை (ளு.வு.P. இராஜேஸ்வரன்), இலங்கையில் பல்கலைக்கழகக் கல்வி இன்றைய காலகட்டத்தில் முகங்கொடுக்கவேண்டிய சில பிரச்சினைகள் (சுசீலா அருளானந்தம்), முத்தையன்கட்டு இளைஞர் குடியேற்றத்திட்டம்: ஒரு விவசாயப் புவியியலாய்வு (இரா.சிவச்சந்திரன்), இலங்கையின் கிழக்குக்கரை மழைவீழ்ச்சி வலயத்தின் மழைவீழ்ச்சித் தளம்பல்கள் (மா.பவனேஸ்வரன்) ஆகிய ஆய்வுக் கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pamp. 4184).

ஏனைய பதிவுகள்