ப.சிவநாதன் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1985. (யாழ்ப்பாணம்: மகாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு, ஏழாலை).
(12), 134 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 24×16 சமீ.
பேராசிரியர் ப.சந்திரசேகரம் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இவ்விதழில் பண்டிதமணி ஆய்வில் எழும் சிக்கல்கள் (சு.சுசீந்திரராசா), கற்றலில் கட்டுப்பாடு (வ.ஆறுமுகம்), அனுபலப்த்திப் பிரமாணம் (நா.ஞானகுமாரன்), ஈழத்து நவீன தமிழ் நாடக மரபின் தோற்றம் (சி.மௌனகுரு), தமிழில் யாப்பும் யாப்பியலும்-வரலாற்று நோக்கு (நா.சுப்பிரமணியன்), பௌத்த சிற்பங்கள் ஊடாக அறியப்படும் இலங்கை-ஆந்திர உறவுகள் (ப.புஷ்பரட்ணம்), நாட்டார் கலைமரபில் வசந்தன் கூத்து-ஓர் ஆய்வு (இ.பாலசுந்தரம்) ஆகிய ஏழு ஆய்வுக் கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.