12405 – சிந்தனை (தொகுதி V, இதழ் 1,2).

ச.சத்தியசீலன் (இதழாசிரியர்), சி.முருகவேள் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜுலை 1993. (யாழ்ப்பாணம்: யு டீ அச்சகம், 430, காங்கேசன்துறை வீதி).

(4), 116 பக்கம், விலை: ஆண்டு சந்தா ரூபா 300., அளவு: 24.5×18.5 சமீ.

சிந்தனை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட ஆய்விதழாகும். வருடத்திற்கு மூன்று இதழ்களாகத் தொடங்கிய இவ்விதழின் 5ஆவது ஆண்டின் முதலிரு இதழ்களினதும் இணைந்த பிரசுரமாக இது வெளிவந்துள்ளது. இவ்விதழில் அடங்காப்பற்று வன்னிமைகள் (சி.பத்மநாதன்), சங்கரரின் உலகு பற்றிய நோக்கு (நா.ஞானகுமாரன்), யாழ்ப்பாண மாவட்டத்தில் இறப்புக்களின் போக்கினைத் தீர்மானிக்கும் காரணிகளும் விளைவுகளும் (கா.குகபாலன்), இலங்கையில் ஏற்றுமதி மேம்பாட்டுக் கைத்தொழிலாக்கம்-சாதனைகள், குறைபாடுகள், சவால்கள் (கா.கந்தையா), கிராமிய வறுமைத் தணிப்பு-உலக வங்கியின் அணுகுமுறை (சி. அம்பிகாதேவி), இலங்கையில் விஞ்ஞானக் கல்வியின் தேவையும் அதன் இன்றைய நிலையும் (சு.அருளானந்தம்), யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் இறந்தகால அமைப்பு (இ.கயிலைநாதன்), பிரித்தானியர் கால நல்லூர்-ஒரு நோக்கு (ச. சத்தியசீலன்), யாழ்ப்பாணக் குடாநாட்டின் நன்னீர் வளம்-ஒரு நோக்கு (செ. பாலச்சந்திரன்) ஆகிய ஒன்பது ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்