12406 – சிந்தனை (தொகுதி V, இதழ் 3).

ச.சத்தியசீலன் (இதழாசிரியர்), சி.முருகவேள் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, கார்த்திகை 1993. (யாழ்ப்பாணம்: யு டீ அச்சகம், 430, காங்கேசன்துறை வீதி).

(7), 105 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ஆண்டு சந்தா ரூபா 300., அளவு: 23.5×19 சமீ.

சமகால ஈழத்துத் தமிழ்க் கவிதையில் முப்போக்குகள்-ஒரு மூன்றாம் உலக இலக்கியக் கண்ணோட்டம் (சுரேஷ் கனகராஜா), அழகியலும் மதமும் (அ.நோ. கிருஷ்ணவேணி), இலங்கையில் இனவாதமும் தேசக் கட்டுமானமும் (ச. சத்தியசீலன்), வரலாற்றுக்கு முற்பட்டகால ஈழத்து இந்துமத நம்பிக்கைகள் (கலைவாணி இராமநாதன்), சுயாதீனசித்தமும், சைவசித்தாந்தமும் (நா. ஞானகுமாரன்), யாழ்ப்பாணக் குடாநாட்டின் உருவாக்கமும் அதன் உருவவியல் அமைப்பும்-விமானப்பட அடிப்படையிலான ஆய்வு (S.T.B. இராஜேஸ்வரன், ஜி.றொபேட், இ.துஷ்யந்தி), மட்டக்களப்புப் பிரதேசத்தின் காலநிலையியல் நீர்ச்சமநிலை (க.இராஜேந்திரம், செ.பாலச்சந்திரன்), இலங்கை மீன்பிடித்துறையின் இன்றைய நிலை-ஒரு நோக்கு (ஏ.எஸ்.சூசை), செய்தித் தொடர்புறுத்தலுக்குரிய இடையூறுகளும் அவற்றை வெற்றிகொள்வதில் ஆவணப்படுத்தலுக்குரிய பங்களிப்பும் (ஆர்.பரராஜசிங்கம்), கயிலாய வன்னியனார் மட தர்மசாதனப் பட்டையம்-சில வரலாற்றுக் குறிப்புகள் (சி.பத்மநாதன்) ஆகிய பத்து ஆய்வுக் கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24506, 31496).

ஏனைய பதிவுகள்