ச.சத்தியசீலன் (இதழாசிரியர்), சி.முருகவேள் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மே 1997. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).
(6), 119 பக்கம், அட்டவணைகள், விலை: ஆண்டு சந்தா ரூபா 300. அளவு: 24×19 சமீ.
1994ஆம் ஆண்டிற்குரிய பங்குனி, ஆடி இதழ் பல்வேறு தடங்கல்களால் மே 1997இல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்விதழில் உள்;ராட்சி அரசாங்கம்: ஒரு எண்ணக்கருக் கண்ணோட்டம் (அ.வே.மணிவாசகர்), சைவசித்தாந்த ஒழுக்கவியல் தேவிகாலோத்திர ஆகமப் போதனைகள் (சோ.கிருஷ்ணராஜா), பௌத்த களத்தில் கிறிஸ்தவ இறையியல்: லின் டீ சில்வாவின் இறையியல் அணுகுமுறை (ஐ. ஹென்றி விக்டர்), திருக்குறளில் ‘ஊழ்” (நா.சுப்பிரமணியன்), நடையியல் நோக்கில் நிலக்கிளி-காட்டாறு ஒப்பாய்வு (ம.இரகுநாதன்), இலங்கைப் பாடசாலைக் கலைத்திட்டத்தில் ஒன்றிணைந்த விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் அமுலாக்கமும் (சு.அருளானந்தம்), கல்வியும் சுயவேலை வாய்ப்புக்களும் சமன்பாடுகளின் பகுப்பாய்வு (சபா.ஜெயராசா), நிலப்பயன்பாட்டு வகைகளை மதிப்பீடு செய்தல் (ளு.வு.P.இராஜேஸ்வரன்), பன்முகப்படுத்தப்பட்ட தலைமைத்துவ அமைப்புகள் சமூக உளவியல் நோக்கு (கே.சிவானந்தமூர்த்தி), இலங்கையை இலௌகீக ஆன்மீக வழிகளில் கைப்பற்றுதல் – சில குறிப்புகள் (எஸ்.கிருஷ்ணகுமார்), ‘சிந்தனை” ஆய்வுக் கட்டுரைகளின் விபரப் பட்டியல் (ச.சத்தியசீலன்) ஆகிய ஆய்வுப் படைப்பாக்கங்களை இவ்விதழ் கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24507).