12409 – சிந்தனை (தொகுதிVIII, இதழ் 1,3).

இராசரத்தினம் சிவசந்திரன் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1998. (கொழும்பு 12: ஜே அன்ட் எஸ். சேர்விஸஸ் அச்சகம், 115 மெசெஞ்சர் வீதி).

(8), 105 பக்கம், விலை: ஆண்டு சந்தா ரூபா 300., அளவு: 24×19 சமீ.

சிந்தனை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட ஆய்விதழாகும். வருடத்திற்கு மூன்று இதழ்களாகத் தொடங்கிய இவ்விதழின் 7ஆவது ஆண்டின் மூன்று இதழ்களினதும் இணைந்த பிரசுரமாக இது வெளிவந்துள்ளது. இவ்விதழில் இனத்துவக் கணித சிந்தனை-சில அறிமுகக் குறிப்புகள் (சோ.சந்திரசேகரன்), சைவசித்தாந்தம் காட்டும் மனித விழுமியங்கள்-சில சிந்தனைகள் (நா. ஞானகுமாரன்), தென்னாட்டு வைணவ பக்திநெறியில் இராமானுஜர் (விக்னேஸ்வரி சிவசம்பு), செல்வச்சந்நிதி ஆலய வழிபாட்டு மரபு- ஒரு குறிப்பு (நாச்சியார் செல்வநாயகம்), பூநகரிப் பிராந்திய தொல்லியல் மேலாய்வில் கிடைத்த தொல் பொருள் சின்னங்கள்: ஒரு வரலாற்று ஆய்வு (பரமு புஷ்பரட்ணம்), சமயஅறிவில் தமிழ்க் கல்வியின் பங்கு (கலைவாணி இராமநாதன்), நவீன தமிழ்க் கவிதைப் பரப்பில் சோலைக்கிளியின் கவிதைகள் (செ.யோகராசா), பத்துப்பாட்டின் கவிதையியல் (கார்த்திகேசு சிவத்தம்பி), பிராந்திய ஒத்துழைப்பிற்கான தெற்காசியச் சங்கம் – அமைப்பும் பிரச்சினைகளும் (தனபாலசிங்கம் கிருஷ்ணமோகன்) ஆகிய ஒன்பது ஆய்வுக் கட்டுரைகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24510).

ஏனைய பதிவுகள்

Android Apps on the internet Gamble

Articles Harbors Safari Almost every other Well-known Alive Dealer Games What is actually online Black-jack betting? What forms of bingo games arrive during the web