12409 – சிந்தனை (தொகுதிVIII, இதழ் 1,3).

இராசரத்தினம் சிவசந்திரன் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1998. (கொழும்பு 12: ஜே அன்ட் எஸ். சேர்விஸஸ் அச்சகம், 115 மெசெஞ்சர் வீதி).

(8), 105 பக்கம், விலை: ஆண்டு சந்தா ரூபா 300., அளவு: 24×19 சமீ.

சிந்தனை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட ஆய்விதழாகும். வருடத்திற்கு மூன்று இதழ்களாகத் தொடங்கிய இவ்விதழின் 7ஆவது ஆண்டின் மூன்று இதழ்களினதும் இணைந்த பிரசுரமாக இது வெளிவந்துள்ளது. இவ்விதழில் இனத்துவக் கணித சிந்தனை-சில அறிமுகக் குறிப்புகள் (சோ.சந்திரசேகரன்), சைவசித்தாந்தம் காட்டும் மனித விழுமியங்கள்-சில சிந்தனைகள் (நா. ஞானகுமாரன்), தென்னாட்டு வைணவ பக்திநெறியில் இராமானுஜர் (விக்னேஸ்வரி சிவசம்பு), செல்வச்சந்நிதி ஆலய வழிபாட்டு மரபு- ஒரு குறிப்பு (நாச்சியார் செல்வநாயகம்), பூநகரிப் பிராந்திய தொல்லியல் மேலாய்வில் கிடைத்த தொல் பொருள் சின்னங்கள்: ஒரு வரலாற்று ஆய்வு (பரமு புஷ்பரட்ணம்), சமயஅறிவில் தமிழ்க் கல்வியின் பங்கு (கலைவாணி இராமநாதன்), நவீன தமிழ்க் கவிதைப் பரப்பில் சோலைக்கிளியின் கவிதைகள் (செ.யோகராசா), பத்துப்பாட்டின் கவிதையியல் (கார்த்திகேசு சிவத்தம்பி), பிராந்திய ஒத்துழைப்பிற்கான தெற்காசியச் சங்கம் – அமைப்பும் பிரச்சினைகளும் (தனபாலசிங்கம் கிருஷ்ணமோகன்) ஆகிய ஒன்பது ஆய்வுக் கட்டுரைகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24510).

ஏனைய பதிவுகள்

12392 சிந்தனை: மலர் 5 இதழ் 1&2 (ஜனவரி-ஜுலை 1972).

கா.இந்திரபாலா (பதிப்பாசிரியர்), பி.ஏ.ஹ{சைன்மியா (துணைப் பதிப்பாசிரியர்). பேராதனை: சிந்தனை வெளியீடுகள், பேராதனைக் கலைக் கல்விக் கழகம், 1வது பதிப்பு, ஜுன் 1972. (கண்டி: நேஷ னல் பிரின்டர்ஸ், 241, கொழும்பு வீதி). (4), 42

12444 – அகில இலங்கை தமிழ்மொழித் தினம் 1996.

மலர்க் குழு. கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, உயர் கல்வி அமைச்சு, இசுருபாய, பத்தரமுல்ல, இணை வெளியீடு, கொழும்பு: கல்வித் திணைக்களம், மேல் மாகாணம், 1வது பதிப்பு, ஜுலை 1996. (கண்டி: ரோயல் ஓப்செட் அச்சகம்,