சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் (இதழாசிரியர்), எஸ்.சூசை (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2001. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.ஆர். கொம்பியூட்டர் அன் ஓப்செட் பிரின்டர்ஸ், 537 சிவன்கோவில் வீதி, திருநெல்வேலி).
101 பக்கம், விலை: ஆண்டு சந்தா ரூபா 600., அளவு: 25×18.5 சமீ.
இவ்விதழில் ஈழமும் சங்ககால முதுமக்கள் தாழிகளும்-ஓர் ஆய்வு (சி.க.சிற்றம்பலம்), மார்க்ஸினது மெய்யியலின் ஊற்றும் போயாபார்க் கருத்துரைகளும் (சோ. கிருஷ்ணராஜா), ஈழத்துப் புனைகதைகள் பற்றிய ஆய்வு முயற்சிகள் (ம.இரகுநாதன்), இலங்கைத் தமிழ் சிங்கள நாவல்களின் தோற்றம் (சாமிநாதன்-விமல்), அந்நியமாதல் பற்றிய பிரச்சினை ஓர் ஆய்வு (க.சிவானந்த மூர்த்தி), வளர்முக நாடுகளில் பெண்கல்வி விருத்திக்கான மீள் சிந்தனை (மா.சின்னத்தம்பி), தமிழ்ப் பிரதேசத்தில் குடியேற்றத் திட்டங்களும் அவற்றின் அரசியல் பரிமாணங்களும் (ச.சகாயசீலன்), யாழ். குடாநாட்டில் மீன்பிடித் தடைகளும் மீனவர் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் (ஆ.சூசை), தொலை உணர்வுத் தொழில்நுட்பம் ஊடாக மேற்பரப்பு நீர் நிலைகளைப் படமாக்கல் (கருணாகரன்-சுதாகர்), ஈழத்தில் தமிழ் மொழிபெயர்ப்பும் கலைச்சொல்லாக்கமும் (செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்), இந்து மரபுக் கல்வியின் ஆன்மீக சிந்தனைகள் (ஜெ.இராசநாயகம்) ஆகிய 11 ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.