கார்த்திகேசு குகபாலன் (இதழாசிரியர்), சோ.கிருஷ்ணராசா (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜுலை 2004. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி).
129 பக்கம், விலை: ஆண்டு சந்தா ரூபா 600., அளவு: 23X18 சமீ.
இவ்விதழில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் புகையிலை வர்த்தகத்தில் மலையாளம் (க.அருந்தவராஜா), இந்துக்களின் கனவுக்கோட்பாடு (க.அன்ரன் டயஸ்), இந்து சமயத்தில் பழமொழிகள் (இ.கயிலைநாதன்), இலங்கைப் புகலிட நாவல்கள் (செ.யோகராசா), யாழ்ப்பாணத் தமிழரிடையே வழங்கும் ‘சத்தியம் செய்தல்” குறித்த நம்பிக்கை வழக்கம் (கிருஷ்ணபிள்ளை விசாகரூபன்), மெய்யியலில் கெடுதி பற்றிய பிரச்சினை-ஓர் ஆய்வு (நா.ஞானகுமாரன்), முன்பள்ளிக் குழந்தைகளிடையே காணப்படும் பிரச்சினைகளும், அவற்றைக் கையாளும் முறைகளும் (ஜெ.இராசநாயகம்), இலங்கையில் கிடைத்த பார்வதி வெண்கலச் சிலைகள் (செல்லையா கிருஷ்ணராசா), இந்து மக்களின் பரம்பல்-கலாசார குடிப் புள்ளியியல் நோக்கு (கா.குகபாலன்), ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கம்: ஓர் அறிமுகம் (பொ.செங்கதிர்ச்செல்வன்), தந்திரோபாய உருவாக்கற் செய்முறையில் வெளிச்சூழல் ஆய்வின் பங்கு (க.தேவராசா) ஆகிய 11 ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.