செல்லையா கிருஷ்ணராசா (இதழாசிரியர்), எஸ்.சந்திரசேகரம் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜுலை 2015. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி).
103 பக்கம், விலை: ஆண்டு சந்தா ரூபா 600., அளவு: 24.5×19 சமீ., ISSN: 2478- 1061.
சிந்தனை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட ஆய்விதழாகும். வருடத்திற்கு மூன்று இதழ்களாகத் தொடங்கிய இவ்விதழின் 15ஆவது ஆண்டின் முதலாவது இதழ் 2005இல் வெளிவந்த நிலையில், இரண்டாவது இதழ் பத்தாண்டுகள் கழிந்து 2015இல் வெளிவந்துள்ளது. இவ்விதழில் இலங்கையில் தமிழ் கற்றல்-கற்பித்தல்: தற்கால நடைமுறைகளும் சவால்களும் (ஆ. நித்திலவர்ணன்), உலக இலக்கியம் பற்றிய எண்ணக்கருவும் தமிழ் இலக்கியச் சூழலும்: மாற்றத்தினை வேண்டிநிற்கும் தமிழாய்வுச் சூழல் குறித்ததோர் ஆய்வுநோக்கு (ஈ.குமரன்), நீரிழிவு நோயில் யாழ்ப்பாணத்து மருத்துவ மூலிகைகள் செயற்படும் திறன் பற்றிய ஓர் ஆய்வு (ஸ்ரீ.அன்புச்செல்வி, க.ஸ்ரீதரன்), கல்வி உலகின் மாற்றத்தில் முக்கிய பங்குதாரர்களாகிய ஆசிரிய ஆய்வாளர்கள்: புதிய சிந்தனைப் போக்குகளும் செயற்பாடுகளும் (ஜெயலட்சுமி இராசநாயகம்), இனப்படுகொலைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக் கூறுதலும்: ஒரு நுணுக்கப்பட்ட பகுப்பாய்வு (த.கிருஷ்ணமோகன்), சம்பந்த சரணாலயரின் தத்துவ விளக்கமும் ஸ்ரீ காசிவாசி செந்திநாதையரின் உரைச் சிறப்புகளும் (பொ. சந்திரசேகரம்), சர்வதேச அரசியலில் புதிய கோட்பாட்டின் எழுச்சி: ஒருநோக்கு (கே.ரி.கணேசலிங்கம்), காலனிய யாழ்ப்பாணத்தில் சுதேச உயர் குழாமினர்: மரபும் உருமாற்றமும் பற்றிய ஒரு வரலாற்றுச் சமூகவியல் பார்வை (இராஜேஸ்வரன் இராஜேஸ்கண்ணன்), இக்கட்டான நிலையில் மீன்பிடித்தல்: பாக்குக்குடா பிரதேசத்தில் எல்லைதாண்டும் அத்துமீறல்-ஓர் ஆய்வு: ஏ.எஸ்.சூசை, ஜே.இஸ்கொல்டன், எம்.பாவின்க்), நூல்மதிப்புரை: முனைவர் பக்தவத்சலபாரதியின் இலக்கிய மானிடவியல்: தமிழ்ச் சமூகத்தின் செல்நெறிகளின் மீதான பண்பாட்டியல் பார்வை (என்.சண்முகலிங்கன்) ஆகிய பத்து ஆய்வுக்கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 036388.