12417 – சிவசக்தி 1967-1968: றோயல் ; கல்லூரி இந்து மாணவர் ; மன்ற ஆண்டுமலர் .


சு.சு.நவரட்ணம், மு. ஓம்பிரசாதம் (ஆசிரியர் குழு). கொழும்பு 7: இந்து மாணவர்
மன்றம், றோயல் கல்லூரி, 1வது பதிப்பு, 1968. (கொழும்பு 2: அரசன் அச்சகம்)


(24), 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.

கொழும்பு றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்றத்தின் ஆண்டு மலர் இது.
ஆசியுரைகள், அறிக்கைகள், வர்த்தக விளம்பரங்களுக்கிடையே தமிழ் அறிஞர்கள்,
மாணவர்களின் இந்துசமயக் கட்டுரைகள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன.
கந்தபுராணமும் நாவலர் பெருமானும் (பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை),
பாரதிக்குச் சிவசக்தி அளித்த குருவருள் சேர் திருவருள் பொலியும் ஈழவளநாடு
(க.கணபதிப்பிள்ளை), வழித்துணை வே.குமாரசாமி), இந்து சமயமும் காந்தியத்
தத்துவங்களும் (ஆர்.கந்தையா), சிந்தனைக்கு (அ.க.சர்மா), இலங்கையில்
நாகவழிபாட்டுத் தலங்கள் (ஆர்.சுப்பிரமணியம்), சமயக் குரவர்கள் சைவசமய
வளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டுகள் (க.சங்குகன்), இலங்கையின் பாடல்பெற்ற
தலங்கள் (பொ.சூரியகுமார்), நெறி காட்டும் திரு (மு.மகாலிங்கம்), அருள்நோக்கு
(நா.தேவமனோகரன்), பெண்மை காட்டிய நெறி (நா.தேவமனோகரன்), பக்தி
நெறி (ம.முருகேசு), ஆசை (வு.ஸ்ரீதரன்), சமயக்கல்வி (எஸ்.மனோகரன்),
நல்லவண்ணம் வாழவைக்கும் நவராத்திரி (ந.சிவானந்தன்) ஆகிய தமிழ்ப்
படைப்பாக்கங்களும் ஏழு ஆங்கிலப் படைப்பாக்கங்களும் இம்மலரில் இடம்
பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது.
சேர்க்கை இலக்கம் 4583).

ஏனைய பதிவுகள்

12861 – ஒரு சில விதி செய்வோம்: கவிதைச் சிந்தனைகள்.

இ.முருகையன். யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 226, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1972. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம்). (6), 80 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 20.5 x 13.5 சமீ. நெடியதொரு

13A08 – சுத்த போசன பாக சாத்திரம்.

சு.திருச்சிற்றம்பலவர். சுன்னாகம்: நா.பொன்னையா, வட-இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 4வது பதிப்பு, 1967, 1வது பதிப்பு, 1935. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xii, 196 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18 x 12.5 சமீ.

14786 பால் வனங்களில் (நாவல்).

மலரன்பன். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2019. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). xix, 20-248 பக்கம், விலை: ரூபா 650.,

14368 இந்து நாதம்: 1985. மலர்க் குழு.

கொழும்பு 4: இந்து மாணவர் மன்றம், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1985. (கொழும்பு: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு).(92) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5

14013 கிராமிய பூபாளம் 2018: சர்வோதய சிறப்பு மலர்.

மலர்க்குழு. ஜேர்மனி: புங்குடுதீவு தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியம், என்னப்பெற்றால், 1வது பதிப்பு, 2018. யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி). 117 பக்கம், வண்ணப்படங்கள், விலை: அன்பளிப்பு, அளவு: