சு.சு.நவரட்ணம், மு. ஓம்பிரசாதம் (ஆசிரியர் குழு). கொழும்பு 7: இந்து மாணவர்
மன்றம், றோயல் கல்லூரி, 1வது பதிப்பு, 1968. (கொழும்பு 2: அரசன் அச்சகம்)
(24), 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.
கொழும்பு றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்றத்தின் ஆண்டு மலர் இது.
ஆசியுரைகள், அறிக்கைகள், வர்த்தக விளம்பரங்களுக்கிடையே தமிழ் அறிஞர்கள்,
மாணவர்களின் இந்துசமயக் கட்டுரைகள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன.
கந்தபுராணமும் நாவலர் பெருமானும் (பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை),
பாரதிக்குச் சிவசக்தி அளித்த குருவருள் சேர் திருவருள் பொலியும் ஈழவளநாடு
(க.கணபதிப்பிள்ளை), வழித்துணை வே.குமாரசாமி), இந்து சமயமும் காந்தியத்
தத்துவங்களும் (ஆர்.கந்தையா), சிந்தனைக்கு (அ.க.சர்மா), இலங்கையில்
நாகவழிபாட்டுத் தலங்கள் (ஆர்.சுப்பிரமணியம்), சமயக் குரவர்கள் சைவசமய
வளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டுகள் (க.சங்குகன்), இலங்கையின் பாடல்பெற்ற
தலங்கள் (பொ.சூரியகுமார்), நெறி காட்டும் திரு (மு.மகாலிங்கம்), அருள்நோக்கு
(நா.தேவமனோகரன்), பெண்மை காட்டிய நெறி (நா.தேவமனோகரன்), பக்தி
நெறி (ம.முருகேசு), ஆசை (வு.ஸ்ரீதரன்), சமயக்கல்வி (எஸ்.மனோகரன்),
நல்லவண்ணம் வாழவைக்கும் நவராத்திரி (ந.சிவானந்தன்) ஆகிய தமிழ்ப்
படைப்பாக்கங்களும் ஏழு ஆங்கிலப் படைப்பாக்கங்களும் இம்மலரில் இடம்
பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது.
சேர்க்கை இலக்கம் 4583).