12418 – தமிழ் ஆரம் 2016.

சுகிர்தா சிவசுப்பிரமணியம், டிலக்ஷிகா அரவிந்தன் (இதழாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: தமிழ் மன்றம், யாழ். இந்து மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: கரிகணன் பதிப்பகம், 681, காங்கேசன்துறை வீதி).

xvii, 90 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19 சமீ.

யாழ். இந்து மகளிர் கல்லூரியின் தமிழ் மன்றத்தினரால் வெளியிடப்பட்ட ‘தமிழ் ஆரம்” என்ற கல்லூரி ஆண்டிதழின் மூன்றாவது பிரசுரம் இது. மாணவர்கள், ஆசிரியர்களின் படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. தோல்விகள் தடையல்ல, உலக தாய்மொழித் தினம், வாசிப்புத் திறனை மேம்படுத்துவோம், தங்கத்தமிழ், விஞ்ஞானமும் இலக்கியமும், இன்றைய வாழ்வில் இசைத்துறையின் பங்களிப்பு என இன்னோரன்ன 42 தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61217).

ஏனைய பதிவுகள்

10351 மாரடைப்பு: தடுப்பதற்கான வழிமுறைகளும் மருத்துவமும்.

ஏ.சந்திரசேகரம். கொழும்பு: Flower Scientific Books, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி). (7), 89 பக்கம், படங்கள், விலை: ரூபா 190., அளவு: 21.5×14.5 சமீ.,