12423 – தூரிகை 2007.

உயர்தர மாணவர் மன்றம். கொழும்பு 14: புனித அந்தோனியார் தமிழ் மகா வித்தியாலயம், மகாவத்தை, 1வது பதிப்பு, 2007. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை).

(10), 124 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ.

கொழும்பு மாவத்தை புனித அந்தோனியார் தமிழ் மகா வித்தியாலயத்தினால் வெளியிடப்படும் சிறப்பு மலர். இதில் அறிக்கைகள், நிர்வாகக் குழுவினரின் ஆசியுரைகளுடன் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் படைப்பாக்கங்கள் கட்டுரை, கதை, கவிதைகளாக இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பரதக் கலை ஒரு தெய்வீகக் கலை, கால அடிப்படையில் இந்து மதம், தொலைக்காட்சித் தொடர்கள், மனித வாழ்வில் மது, இலங்கையில் இயற்கை வளங்கள், சைவ வாழ்வில் அறிந்திருக்க வேண்டியவை போன்ற இன்னோரன்ன தலைப்புகளில் இக்கட்டுரை களும் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 44346).

ஏனைய பதிவுகள்