12425 – நித்திலம்: தமிழ் மொழித்தினவிழா மலர் 1998

எஸ்.எதிர்மன்னசிங்கம் (தொகுப் பாசிரியர்). திருக்கோணமலை: வடக்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம், 1வது பதிப்பு, ஜுன் 1998. (திருக்கோணமலை: ஸ்ரீ கணேச அச்சகம்).

(14), 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ.

திருக்கோணமலை வடக்கு-கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் வருடாந்தம் நடத்தும் தமிழ் மொழித்தின விழாவினையொட்டி வெளியிடப்படும் சிறப்பு மலர் இதுவாகும். அப்பிரதேசத்தின் மாணவர்கள், ஆசிரியர் மற்றும் கல்வியியலாளர்களின் பல்துறை ஆய்வுகள், ஆக்கங்கள் என்பன பல்வேறு படைப்பாக்கங்களின் வாயிலாக இதில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பல்வேறு ஆசியுரைகளுடன் வெளிவரும் இம்மலரில், புதிய கல்விச் சீர்திருத்தங்கள் பாட ஏற்பாட்டு மாற்றங்கள் (சோ.சந்திரசேகரன்), தமிழன்னையிடம் ஒன்று கேட்பேன்- கவிதை (தவநேசன் பிரதாபன்), தமிழ் ஆளுமை: மொழி ஆளுகையின் தன்மையே ஒருவனின் ஆளுமை விருத்தியைத் தீர்மானிக்கிறது (எம்.எஸ்.ஸ்ரீதயாளன்), மாதா,பிதா,குரு,தெய்வம் (கே.ரெனிக்கா குரூஸ்), வெற்றிப் பாதை (பூ.சௌதாயினி), வெண் புறாவே விரைந்து வா-கவிதை (டி.பி.சந்திரலால்), மாலை நேரத்தில் கடற்கரைக் காட்சி (நீரஜா சிவகணேசன்), ஏற்றிய தீபம் – சிறுகதை (ஏ.கே. செபானா), பாரம்பரியக் கலைகள் மறக்கப்படக் கூடாதவை (ச.இரமணீகரன்), இனியொரு விதிசெய்வோம் – கவிதை (கந்தசாமி மோகனதாசன்) ஆகிய ஆக்கங்களுடனும், நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பரிசுபெற்ற போட்டியாளர்களின் பெயர்ப்பட்டியல், வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ்மொழித்தின விழாக்குழுச் செயலாளரின் செய்தியும் நன்றி நவிலலும் ஆகிய அம்சங்களும் இறுதியில் இடம்பெற்றுள்ளன. இம்மலர் வெளியீட்டுக் குழுவில் எஸ்.மகாலிங்கம், எஸ். எதிர்மன்னசிங்கம், எஸ்.நவரட்ணம், எஸ்.மகேஸ், எஸ்.இரமணீகரன், எஸ். பவளகாந்தன், எம்.பற்குணம், பீ.தண்டாயுதபாணி, என்.ஸ்ரீதேவி என ஒன்பது பேர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34534. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 004034).

ஏனைய பதிவுகள்

12013 – இந்து சாதனம் 75ஆவது ஆண்டு நினைவு மலர்(இந்து சாதன எழுபானைந்தாண்டு மலர்).

மு.மயில்வாகனம், மு.வைத்தியலிங்கம், சிவ உ.சோமசேகரம், க. கணபதிப்பிள்ளை, சி.சீவரத்தினம், க.கி.நடராசன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: சைவ பரிபாலன சபை, 1வது பதிப்பு, சித்திரை 1967. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச அச்சியந்திரசாலை). (8), 72+18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

14324 அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கான அரசாங்க ஆலோசனைகள்.

இலங்கை அரசாங்கம். கொழும்பு: நீதி, அரசியலமைப்பு அலுவல்கள், இன அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1997. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களம்). vi, 259 பக்கம், அட்டவணைகள்,