மலர்க்குழு.வவுனியா: வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, பூந்தோட்டம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1995. (கொழும்பு 5: சரசு பதிப்பகம்).
124 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி தனது இரண்டாவதாண்டு நிறைவை 18.10.1995 அன்று கொண்டாடி மகிழ்ந்தவேளையில் வெளியிடப்பெற்ற கல்லூ ரியின் ஆண்டு மலர். கல்வியியற் கல்லூரிகளும் ஆசிரிய கல்வியும், ஆசிரியர் கல்வி, ஆசிரியரும் மாணவர் பரீட்சையில் சித்தியின்மைக்கான காரணங்களும், நம்நாட்டு எழுத்தறிவு-ஏற்றம் பெற்ற காரணங்கள், இன்றைய நிலையில் பாடசாலையும் சமுதாயமும், கல்லூரியின் உடற்கல்விச் செயற்பாடு, வகுப்பறைக் கற்பித்தலில் நடிப்பு முறையின் முக்கியத்துவம், வினைத்திறன் மிக்க பாடசாலைகளுக்கு தனியார் தொடர்புகளின் அவசியம், இலங்கை கல்வி முறையில் இணைப்பாட விதானம், இன்றைய கல்வி முறை, கற்பித்தல், விளையாட்டுக்களில் விசையும் இயக்கமும், உடற்கல்வியின் தத்துவவியல் அடிப்படை, இசைக்கலை வரலாற்றில் சங்கீதக்கலையின் பெருமை, இருபதாம் நூற்றாண்டில் கவிதை, இசையும் ஆசிரியரும், வீண் வார்த்தையின் விபரீதம், 21ஆம் நூற்றாண்டில் சூழல் மாசடைவதால் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள், விரிவான முடிவை நோக்கி, பாடசாலைக் கல்வியால் பெறக்கூடிய சிறந்த அனுபவங்கள், நிஜத்தின் தரிசனம், இலக்கணத்தின் அவசியமும் பயிற்றும் முறைகளும் ஆகிய 22 தமிழ்க் கட்டுரைகளும் ஆறு சிங்களக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24512).