மலர்க்குழு. வவுனியா: வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, பூந்தோட்டம், 1வது பதிப்பு, 2001. (கொழும்பு: ஜெயனிக்கா அச்சகம்).
127 பக்கம், புகைப்படங்கள், ஓவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×20 சமீ.
ஆசிச் செய்திகள், வாழ்த்துரைகள், கல்லூரி அறிக்கைகள் ஆகியவற்றுடன் கற்றலுக்காகக் கற்றல், கட்டுறுப் பயில்வு, சிறுகதை என்பது சிறிய கதை அன்று, மாணவர்களது ஒழுங்குணர்வும் பாடசாலைகளின் தூர நோக்கும், நாலடியார் காட்டும் கல்விச் சிந்தனைகள் ஒரு நோக்கு, 21ஆம் நூற்றாண்டில் ஆசிரியர் எதிர்நோக்கும் சவால்கள், கல்விக் கல்லூரிகளில் ஆசிரியர் பயிலுனர்களுக்கான செயலாய்வு, சாரணியத்தில் ஆளுமை, ஆதங்கம், மாணவர்களை வெற்றிபெறச் சிந்திப்பதற்கான கல்வி, புதிய கல்விச் சீர்திருத்தம் இன்றைய சூழலில் தேவையா?, அவன் குற்றவாளியா?, முன்னேற.., விதியின் கை ஓங்குகிறது, வகுப்பறையில் ஒழுங்கு, ஏமாற்றம், மாணவ மனநிலைகள், கல்வி, முடியாத பயணங்கள், இணைபு, ஆரம்பக் கல்வி, மனிதம், ஆசிரியத் தொழிலின் மகத்துவம், புதிய நூற்றாண்டுக்கான கல்வி, கல்வியியற் கல்லூரியின் பயிற்சி, பாடசாலை மட்டக் கணிப்பீடு, புரிந்துணர்வு எம் தேசத்தில், பாடசாலையின் இன்றைய ஆசிரியர், கணிதமும் சமூக விழுமிய மனப்பாங்கு விருத்தியும், எல்லோருக்கும் கல்வி ஆகிய தலைப்புகளில் ஆசிரிய மாணவர்கள், விரிவுரையாளர்கள் எழுதிய ஆக்கங்கள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28330).