12436 – வித்தியோதயம்: 1976-77-78.

ச.அருட்சோதி, நா.வரதராசா (இணை இதழாசிரியர்கள்). நுகேகொடை: தமிழ் மன்றம், வித்தியோதய வளாகம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1978. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

xxiv, 236 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.

வித்தியோதய பல்கலைக்கழகத் தமிழ்மன்றத்தின் ஆண்டிதழ். 1976-1978 வரையிலான மூன்றாண்டுகளின் கூட்டிதழாக வெளிவந்துள்ளது. இவ்விதழில் கணக்கியல், முகாமையியல், வணிகவியல், பொருளியல், அரசியல், சிறுகதை, சட்டவியல் ஆகிய பிரிவுகளின்கீழ் ஆக்கங்கள் தரப்பட்டுள்ளன. கணக்கியல் பிரிவில் மூலதனத் திட்டங்களின் இலாப இயல்பு முறைகள் (டி.ரி.இராஜரட்ணம்), ஒன்றித்த கணக்குகளும் கம்பனிச் சட்டமும் (ச.தம்பிப்பிள்ளை), கணக்கீடும் கணக்கீட்டுக் கற்பிதங்களும் (க.முருகேசு), கணக்கியலில் சில நுண்ணாய்வுகள் (எஸ்.இராசதுரை) ஆகிய ஆக்கங்களும், முகாமையியல் பிரிவில் முகாமையில் அதிகாரக் கையளிப்பு (மீரா சவுரிமுத்து), சந்தைப்படுத்தல் திட்டமும் அதன் முக்கியத்துவமும் (வ.அன்ரனி) ஆகிய ஆக்கங்களும், வணிகவியல் பிரிவில் வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே உள்ள உறவுமுறை (இ.பாலசிங்கம்), ஏற்றுமதி இறக்குமதியில் வர்த்தக மாற்றுவீதத்தின் தாக்கம் (து.சந்திரகுமார்) ஆகிய ஆக்கங்களும், பொருளியல் பிரிவில் இரட்டை அமைப்பும் பொருளாதார அபிவிருத்தியும் (வி.நித்தியானந்தம்), கைத்தொழிற்துறை-பொருளாதார அபிவிருத்தியில் அதன் பங்கு (எம்.யூ.எம்.ஸனூஸ்), குறைவிருத்தி நாடுகளின் இறைக்கொள்கை (கே.எஸ்.நடராசா), இலங்கையின் வேலையின்மையின் நோக்கும் வேலை நிறைவுக் கொள்கையின் பங்கும் (சி.சிறீஸ்கந்தராசா), பொதுத்துறை நிறுவனங்களில் விலையிடற் கொள்கைகள் (கே.ஏ.முனசிங்க), சுதந்திர வர்த்தக வலயம் – ஓர் அறிமுகம் (இ.இராசசுந்தரம்), இலங்கையில் விவசாயத்துறை தொடர்பான போக்குவரத்து முயற்சியும் சந்தைப்படுத்தலும் (க.சுந்தரலிங்கம்), இலங்கை நாணயத்தின் மீள்மதிப்பீடு (மொஹமட் இல்லியாஸ்) ஆகிய ஆக்கங்களும், அரசியல் பிரிவில் 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்-ஒரு கண்ணோட்டம் (ஆர்.ஜெயரத்தினராசா) என்ற கட்டுரையும், சிறுகதைப் பிரிவில் என்.சரவணபவன் எழுதிய ‘அம்மா” என்ற சிறுகதையும், சட்டவியல் பிரிவில் கம்பனிகள் சட்டம் (செ.தங்கராசா) என்ற கட்டுரையும் இறுதியாக மன்றச் செய்தியும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11237).

ஏனைய பதிவுகள்