12437 – விழி 1994.

வீரவாகு பரஞ்சோதி (இதழாசிரியர்). வவுனியா: தேசிய கல்வி நிறுவனம்- பிரதேச நிலையம், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், வவுனியா தென் கல்வி வலயம், கண்டி வீதி, 1வது பதிப்பு, 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை).

60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் (ஏஃஏயஎரnலைய வுயஅடை ஆயனாலய ஆயாய ஏனைலயடயலயஅ) வட மாகாணம் வவுனியா மாவட்டம் வவுனியா தென் கல்வி வலயத்தில் கண்டி வீதியில் 1890இல் தாபிக்கப்பட்ட பாடசாலையாகும். இது இன்று அம்மாவட்டத்தின் முன்னணி கலவன் பாடசாலைகளில் ஒன்றாகத் திகழ்கின்றது. இதுவொரு தேசியப் பாடசாலையாகும். இப்பாடசாலையில் தேசிய கல்வி நிறுவகத்தின் பிரதேச நிலையமும் இயங்குகின்றது. அதில் கற்கும் பட்டப்பின்படிப்பு கல்வி டிப்ளொமா பாடநெறி 1992ஃ93 வருட மாணவர்களின் வெளியீடாக ‘விழி” (மலர் 1, இதழ் 1) வெளியிடப்பட்டுள்ளது. ஆசிச் செய்திகளுடன் ஆசிரிய மாணவர் களின் கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. பாடசாலை ஒரு சமூக நிறுவனம் (இந்துமதி இராசரெத்தினம்), மேற்பார்வையும் பாடசாலை அபிவிருத்தியும் (வீரவாகு பரஞ்சோதி), ஆசிரியன் ஒரு சமூக மனிதன் (வேலுப்பிள்ளைஅன்னலட்சுமி), வகுப்பறை முகாமைத்துவமும் ஆசிரியரும் (தாமோதரம்பிள்ளை விக்கினேஸ்வரி), பாடசாலையில் ஓர் அசாதாரண நிலை ஏன்? (இ.சிவநாதன்), ஆசிரியரின் கடமைகளும் பொறுப்புகளும் (நாகேஸ்வரி மாணிக்கவாசகம்), ஆசிரியரும் நேர முகாமைத்துவமும் (ஜெ.தவமனோகரன்), கல்வியில் வீண் விரயங்கள்-ஒரு கண்ணோட்டம் (சி.அழகரெத்தினம்), கற்றலில் ஊக்கம் (ஜீ. நடராஜா), ஆசிரியப் பணியே அறப்பணி (வ.தர்மரட்ணம்), ஆரம்பக் கல்வியின் அவசியம் (கு.நிமலேஸ்வரி), விஞ்ஞானம் கற்பிக்கும் நுட்பமுறைகள் (க.பாலராஜா), தமிழ்மொழி கற்பித்தலில் துணைச்சாதனப் பயன்பாடும் ஆக்கத்திறன் விருத்தியும் (அ.தனபாக்கியம்), உத்தியோகம் பார்க்கும் குடும்பப் பெண்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் (த.கணேசபாதம்), ஈழநாட்டில் இசை வளர்ச்சி (த.மனோரஞ்சிதம்), மாணவர்கள் மையக் கல்வி பற்றி ஒரு நோக்கு (இ.கந்தையா) ஆகிய கட்டுரைகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 014276).

ஏனைய பதிவுகள்

Bewertungen Zu Wunderino Com

Content Fallstricke Und Mögliche Fehler Beim Bonus Von Wunderino Unsere Bewertung Der Wunderino App Kann Ich Bei Wunderino Freispiele Erhalten? Vor allem in Deutschland genoss