12438 – வெளி: நான்காவது ஆண்டு மலர் 2004.

த.சேரலாதன் (இதழாசிரியர்). மட்டக்களப்பு:
மாணவர் அவை, கலை பண்பாட்டுப் பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது
பதிப்பு, 2004. (மட்டக்களப்பு: வனசிங்கா பிரிண்டர்ஸ், திருமலை வீதி).


ix, 117 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×20 சமீ.


தமிழ்ச் சமூகத்தில் தொலைக்காட்சி நாடகங்கள், சுனாமி முன் எச்சரிக்கை
முறைமைகள், பல்கலைக்கழக ஆசிரியர்களும் ஆராய்ச்சிகளும், திண்மக் கழிவுமுகாமைத்துவம், ஊடகங்களின் தாக்கத்தால் மாறிவரும் மட்டக்களப்பு, ஜப்பானிய‘ஐ”விதி எண்ணக்கரு, ஐ.நா.ஸ்தாபனமும் அதன் யாப்புகளும், இலங்கைப்பெருந்தோட்டத் தொழிற்சங்க இயக்கங்கள், ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி பற்றியஒரு மறுமதிப்பீடு, மட்டக்களப்பில் திருமணச் சடங்குகள் மரபும் மாற்றமும்,பிரதாப முதலியார் சரித்திரம் காவியமா? நாவலா?, மெல்லத் தமிழ் இனி,சுரண்டலுக்கும் கட்டுப்படுத்தலுக்குமான கருவியாக விஞ்ஞானம், விஞ்ஞானமுறையியலில் உய்த்தறியும் தொகுத்தறியும், பெண்கள் மீதான வன்முறையும்பெண்ணிலைவாதச் சிந்தனையும், தொழில்நுட்பம்-தொழில்நுட்பக் கலைகளில்அரசியல், இலங்கையில் பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள்,ஈழத்துக் கூத்தரங்கில் பங்குகொள் ஆய்வுச் செயற்பாடுகள், தமிழ் வரிவடிவத்தில்ஏற்பட்ட மாறுதல்கள், கோணேசின் ஓவியங்கள் ஆகிய கட்டுரைகளும், ஈழத்தில்
மட்டுமல்ல, சேற்றில் செந்தாமரை, சுந்தரும் ஓட்டுக் கொழுக்கட்டையும், எனது
நினைவுகளிலிருந்து ஆகிய சிறுகதைகளும், என் வாழ்வும் விளையாட்டும், அலைஅலையாய், புதியது, ஏன் சுனாமியானாய், விதி வரைந்த கோலம், பட்டம்கட்டுகிறோம் பக பகா, நஷ்டஈடு, யுகவேகம், தனிமை சுகம், மாறாத காயங்களுடன்,புள்ளயப்பிடி பேயும் புனிதவதித் தாயும், வளாக நட்பு, நச்சுவேர், கால் பதித்தவேளை, மானிடம் மலரும், முடிவில்லாப் பேச்சுக்கள், ஒரு நாள் கழியுமோ,அறிவுத் தீபத்தை அகத்தில் ஏற்றுவோம், உன்னையே நீ அறிவாய் ஆகியகவிதைகளும் இம்மலரை அழகுசெய்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்கநூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37277)

ஏனைய பதிவுகள்

Hot Target Slot

Content Jaki to Serwis Spośród Grami Losowymi Wyselekcjonować, Aby Szaleć Po American Hot Slot 27 Na Prawdziwe Pieniążki? Sizzling Hot: Wsad Automatów Do Gry Po