12441 – அகில இலங்கை தமிழ்மொழித் தினம் 1992

. மலர்க் குழு. கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, உயர் கல்வி அமைச்சு, இணை வெளியீடு, கொழும்பு: கல்வித் திணைக்களம், மேல் மாகாணம், 1வது பதிப்பு, ஜுலை 1992. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு).

(50) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×22 சமீ.

கல்வி உயர்கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பிரிவு மேல்மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடாத்தும் அகில இலங்கைத் தமிழ் மொழித் தின விழா 1992 கண்டி, புனித அந்தோனியார் கல்லூரி மண்டபத்தில் 19.7.1992 அன்று பி.ப. 2.45 முதல் மாலை 8.30 வரை, கல்வி இராஜாங்க அமைச்சர் இராசமனோகரி புலேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வெளியிடப்பெற்ற சிறப்பு மலர் இது. குழுக்கள், உபகுழுக்கள் மற்றும் பொறுப்பாளர்களின் பட்டியல், ஆசிச் செய்திகள், போட்டிகளில் பரிசுபெற்ற மாணவர்களின் விபரம், நிகழ்ச்சி நிரல் போன்றவற்றை உள்ளடக்கியதாக இச்சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28314).

ஏனைய பதிவுகள்

14248 சமூகத்தை அணிதிரட்டல், வலுவூட்டல், சமூக நிலைமாற்றுதல் தொடர்பில் மாதிரிக் கட்டமைப்பையும் உபாயங்களையும் உருவாக்குதல்.

பிளன்டினா மகேந்திரன், சிரானி அனுசியா அன்ட்ரூ (ஆங்கில மூலம்), J.P.A. றஞ்சித்குமார். யாழ்ப்பாணம்: அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம், யாழ்ப்பாண மாவட்டம், 1வது பதிப்பு, மார்கழி 2012. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்).

12899 – அண்ணாமலை அருள்விளக்கு.

ஸ்ரீ ரமண அடியார் குழு. இலங்கை: பகவான் ஸ்ரீரமண மகரிஷிகள் நூற்றாண்டு விழா வெளியீடு, 1வது பதிப்பு, மார்ச் 1980. (கொழும்பு: ராஜா பிரஸ், 92, பாமங்கடை வீதி). (20) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

14591 ஒரு தேவதையின் சிறகசைப்பு.

பால.சுகுமார். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி). 72 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×15

14267 அரசியற் கொள்கையின் வளர்ச்சி. சாள்ஸ் வெரேக்கர் (ஆங்கில மூலம்), த.சபாரத்தினம் (தமிழாக்கம்).

கொழும்பு 7: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1973. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). ix, 273 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ. இந்நூல் The Development of Political

14745 உயிரில் கலந்த வாசம்.

க.சட்டநாதன். கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், 202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆடி 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). vi, 105 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ.,