12442 – அகில இலங்கை தமிழ் மொழித்தினம் ; 1993.

தமிழ்மொழிப் பிரிவு. கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, கல்வி இராஜாங்க அமைச்சு, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).

(52) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×22 சமீ.

கல்வி உயர்கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பிரிவு மேல் மாகாணக் கல்வி அமைச்சின் அனுசரணையுடன் நடத்தும் அகில இலங்கைத் தமிழ் மொழித் தின விழா 1993, பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் 19.7.1993 அன்று இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் இராஜமனோகரி புலந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வினையொட்டி இச்சிறப்பிதழ் வெளியிடப் பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34522).

ஏனைய பதிவுகள்

14369 இந்து நாதம்: 1997.

கணேசன் சாந்தகுமார் (இதழாசிரியர்). கொழும்பு 4: இந்து மாணவர் மன்றம், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, நவம்பர் 1997. (கொழும்பு: யாசீன் பிரின்டர்ஸ்). (88) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19.5

12915 – கரவை ஏ.சீ.கந்தசாமி நினைவுக் கருத்தரங்கு கட்டுரைத் தொகுப்பு.

வி.ரி.தமிழ்மாறன், கொன்சன்ரைன், சோ.சந்திரசேகரம். கொழும்பு: பாரதி வெளியீட்டகம், 1வது பதிப்பு, டிசம்பர் 1995. (தெகிவளை: டெக்னொ பிரின்ட், இல. 6, ஜெயவர்த்தன அவென்யூ). (4), 28 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 21

14387 வணிகக் கல்வி: இன்றைய வாணிப நடைமுறை.

வி.சிவா (இயற்பெயர்: வி. சிவானந்தபாலன்). கொழும்பு 6: வி.சிவானந்தபாலன்இ 1வது பதிப்புஇ ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 6: கார்த்திகேயன் வெளியீட்டகம்இ 501/2, காலி வீதி, வெள்ளவத்தை). (8), 108 பக்கம்இ விலை: குறிப்பிடப்படவில்லைஇ

12563 – தமிழ் மலர்: ஏழாம் புத்தகம்.

நூல் வெளியீட்டுக் குழு. கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 2வது பதிப்பு, 1967, 1வது பதிப்பு, 1966. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). (4), viii, 295 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 2.80,