தமிழ்மொழிப் பிரிவு. கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, கல்வி இராஜாங்க அமைச்சு, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).
(52) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×22 சமீ.
கல்வி உயர்கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பிரிவு மேல் மாகாணக் கல்வி அமைச்சின் அனுசரணையுடன் நடத்தும் அகில இலங்கைத் தமிழ் மொழித் தின விழா 1993, பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் 19.7.1993 அன்று இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் இராஜமனோகரி புலந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வினையொட்டி இச்சிறப்பிதழ் வெளியிடப் பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34522).