12444 – அகில இலங்கை தமிழ்மொழித் தினம் 1996.

மலர்க் குழு. கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, உயர் கல்வி அமைச்சு, இசுருபாய, பத்தரமுல்ல, இணை வெளியீடு, கொழும்பு: கல்வித் திணைக்களம், மேல் மாகாணம், 1வது பதிப்பு, ஜுலை 1996. (கண்டி: ரோயல் ஓப்செட் அச்சகம், 190, கொழும்பு வீதி).

(60) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.

கல்வி உயர்கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பிரிவு மேல்மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடாத்தும் அகில இலங்கைத் தமிழ் மொழித் தின விழா 1996 ஜுலை 19 இல் மாத்தளை நகர மண்டபத்தில் நடைபெற்றபோது வெளியிடப்பட்ட சிறப்பு மலர். ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன் தமிழ்த்தினப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுடைய ஆக்கங்களையும், பங்கேற்றோரினதும் பரிசுபெற்றோரினதும் விபரங்களையும் உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 15072).

ஏனைய பதிவுகள்

12893 – புண்ணிய நதி:அமரர் கந்தையா புண்ணியமூர்த்தி நினைவு மலர்.

மலர்க் குழு. மாதகல்: அமரர் கந்தையா புண்ணியமூர்த்தி நினைவுக் குழு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2016. (யாழ்ப்பாணம்: போஸ்கோ பதிப்பகம். நல்லூர்). (4), 75 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5

Wolf Ascending Slot machine by IGT

Posts No deposit Bucks Incentives – slots Tonybet 10 free spins no deposit Wolf Rising Harbors Expiry day However, Gamblizard claims their editorial independence and

13690 தனித்தலையும் பறவையின் துயர்கவியும் பாடல்கள்.

றகுமான்-ஏ-ஜமீல் (இயற்பெயர்: அப்துல் றகுமான் அப்துல் ஜமீல்). கல்முனை: புதுப்புனைவு இலக்கிய வட்டம், 124A, ஸ்டார் வீதி, பெரியநீலாவணை, மருதமுனை, 1வது பதிப்பு, ஜுன் 2007. (அக்கரைப்பற்று: நியு செலெக்ஷன்). (12), 56 பக்கம்,