12447 – அகில இலங்கைத் தமிழ்மொழித் தினம் ; 1999.

தமிழ்மொழிப் பிரிவு. கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, கல்வி இராஜாங்க அமைச்சு, 1வது பதிப்பு, 1999. (கொழும்பு அச்சக விபரம் தரப்படவில்லை).

(52) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×22 சமீ.

1999ஆம் ஆண்டு தமிழ்மொழித்தின விழாவுக்கென மாகாணக் கல்வி அமைச்சு மட்டத்தில் மாணவ மாணவியரின் திறமையைக் காட்டக்கூடிய பல்வேறு போட்டிகள், வெகு விமரிசையாக நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து அகில இலங்கைத் தமிழ்த்தினப் போட்டியினை மிகவும் கோலாகலமாக நடத்தவென கல்வி, உயர்கல்வி அமைச்சும், கல்வி இராஜாங்க அமைச்சும் துரிதமாகச் செயற்பட்டன. 1999க்கான அகில இலங்கைத் தமிழ்மொழித் தின மலர் 19.7.1999இல் நடத்தப்பட்ட விழாவினையொட்டி மாணவர்களின் போட்டி விபரங்கள், அவர்களின் படைப்பாக்கங்களுடன் அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் சிலவும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17885).

ஏனைய பதிவுகள்

14827 குருதிப் பூஜை (நாவல்).

நிஹால் பீ.ஜயதுங்க (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2018. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).

12351 – இளங்கதிர்: 13ஆவது ஆண்டு மலர் (1960-1961).

வி.கி.இராசதுரை (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1961. (கண்டி: கிங்ஸ்லி அச்சகம், இல. 205, கொழும்பு வீதி). (2), 120 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14117 கருநாகபூஷணம்: வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாகபூஷணி அம்பாள் ஆலய புனராவர்த்தன பிரதிஷடா நவகுண்டபஷ மஹாகும்பாபிஷேகம்.

தளையசிங்கம் இரவீந்திரன் (மலராசிரியர்). வவுனியா: அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாகபூஷணி அம்பாள் ஆலயம், இறம்பைக்குளம், 1வது பதிப்பு, ஜனவரி 2008. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம், 2ம் குறுக்குத் தெரு). xxxxviii, 135 பக்கம்,

12639 – இலங்கையில் பழப்பயிர்களைப் பாதிக்கும் பீடைகளும் அவற்றைக் கட்டுப்படுத்தலும்.

G.A.W.விஜேசேகர, ஜயந்தா இளங்கோன் மெனிக்கே (மூலம்), சீரங்கன் பெரியசாமி (தமிழாக்கம்). பேராதனை: விவசாயஅமைச்சு, விவசாயத் திணைக்களம், 1வது பதிப்பு, 2001. (பெரதெனிய: விவசாய அமைச்சின் அச்சகப் பிரிவு, கன்னொருவை). (6), 72 பக்கம், புகைப்படங்கள்,

14441 தமிழ் மொழியும் இலக்கியமும்: தரம் 7 (இன்பத் தமிழ் 2-செயல்நூல்).

சோதிநாயகி பாலசுந்தரம், விக்னேஸ்வரி செல்வநாயகம், வானதி காண்டீபன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39,

12265 – நீதிமுரசு 2012.

துளசிகா கேசவன் (இதழாசிரியர்). கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்ரொப் வீதி, 1வது பதிப்பு, 2012. (Fast Printers 289, ½, காலி வீதி). (32), 186 பக்கம்,