தமிழ்மொழிப் பிரிவு. கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, கல்வி இராஜாங்க அமைச்சு, 1வது பதிப்பு, 1999. (கொழும்பு அச்சக விபரம் தரப்படவில்லை).
(52) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×22 சமீ.
1999ஆம் ஆண்டு தமிழ்மொழித்தின விழாவுக்கென மாகாணக் கல்வி அமைச்சு மட்டத்தில் மாணவ மாணவியரின் திறமையைக் காட்டக்கூடிய பல்வேறு போட்டிகள், வெகு விமரிசையாக நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து அகில இலங்கைத் தமிழ்த்தினப் போட்டியினை மிகவும் கோலாகலமாக நடத்தவென கல்வி, உயர்கல்வி அமைச்சும், கல்வி இராஜாங்க அமைச்சும் துரிதமாகச் செயற்பட்டன. 1999க்கான அகில இலங்கைத் தமிழ்மொழித் தின மலர் 19.7.1999இல் நடத்தப்பட்ட விழாவினையொட்டி மாணவர்களின் போட்டி விபரங்கள், அவர்களின் படைப்பாக்கங்களுடன் அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் சிலவும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17885).