எஸ்.தில்லைநடராஜா (மலர்க் குழு சார்பாக). கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, உயர் கல்வி அமைச்சு, இணை வெளியீடு, கொழும்பு: கல்வித் திணைக்களம், மேல் மாகாணம், இசுருபாயா, பத்தரமுல்ல, 1வது பதிப்பு, 2001. (கொழும்பு 13: யூ.கே. பிரின்டர்ஸ், 98 A, விவேகானந்தா மேடு).
(4), 56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×22 சம
கல்வி உயர்கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பிரிவு மேல்மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடாத்தும் அகில இலங்கைத் தமிழ் மொழித் தின விழா 2001இல் நடைபெற்றவேளையில் வெளியிடப்பெற்ற சிறப்பு மலர் இது. அழகியற் கல்வியில் நடனத்தின் முக்கியத்துவம் (லீலாம்பிகை செல்வராஜா), கலைத்திட்டமும் மொழி கற்பித்தலும் (தை.தனராஜ்), தமிழ்த் தின விழா சில சிந்தனைகள் (செ.யோகநாதன்), மெல்லத் தமிழினிச் சாகும் (ரு.டு.அலியார்), தமிழர் மரபில் புலக்காட்சியும் ஆடல் அழகியலும் (சபா.ஜெயராசா), இலக்கியம் கற்பித்தல்: ஏன் எதற்கு (கா.சிவத்தம்பி) ஆகிய சிறப்புக் கட்டுரைகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 41194).