12451 – ஆசிரிய தீபம்: சர்வதேச ஆசிரிய தின விழா சிறப்பு மலர் 1994.

சா.மோகனதாஸ் (மலர் ஆசிரியர்). வாழைச்சேனை: ஆசிரிய ஒன்றியம், கோரளைப்பற்று, கோரளைப்பற்று வடக்கு கல்விப் பிரதேசம், வாழைச்சேனைக் கல்விக் கோட்டம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1994. (மட்டக்களப்பு: ஜெஸ்கொம் அச்சகம்).

(14), 50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ.

ஒக்டோபர் 1994 கொண்டாடப்பெற்ற சர்வதேச ஆசிரியர் தின விழாவையொட்டி வெளியிடப்பட்ட இச்சிறப்பு மலரில் ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன், உங்களுடன் சில வார்த்தைகள் (சாமித்தம்பி மோகனதாஸ்), ‘அழகியல்” ஓர் ஆன்மீக வெளிப்பாடு (ந.வெ.அருள்சீலன்), மக்கள் வாழ்வில் இலக்கியங்களின் பயன்பாடு (கு.கமலசேகரன்), புதுச் சரிதம் புனைந்திடுவோம் (செல்வி சசிக்கலா சந்திரசேகரன்), சிறிய பாடசாலைகளில் பல்தர கற்பித்தல் முறைமைகள் (க. கிருஷ்ணபிள்ளை), ஆசிரியன் அன்றும் இன்றும் (ந.ஆ.கோவில்சோதி), ஆசிரியன் (சீ. லோகேஸ்வரி), அக்கரைப் பகுதியின் ஒரு கண்ணோட்டம் (சி.குழந்தைவேல்), ஆசிரியர் என்பவர் யார்? (திருமதி த.தேவராஜா), குறிக்கோள் (இ.ஜீவரெட்ணம்), ஆசிரியர் நாம் (சுமதினி மோகனதாஸ்), றூயவ ளை வாந நுனரஉயவழைn (ளுயசயனாயனநஎi சுயளiயா)இ கல்வியின் விழுமிய நோக்கங்கள் (ம.சிவசுந்தரம்), ஆசிரியரும் தொழில்சார் கல்வியின் அவசியமும் (சா.மோகனதாஸ்), பசியும் பாடலும் (பூ.தர்மபாலன்), சாரணீயமும் ஆசிரியரும் (ஜீ.தம்பிப்பிள்ளை), சமூக விருத்தியில் கல்வியும் ஆசிரியப் பணியும் (ம.வசந்தி), இலங்கையில் இலவசக் கல்வி (கா.தாமோதரம்), தீபமன்றோ (ஏ. மகேசன்), சலனங்களும் தெளிவும் (ராஜலோகினி செல்வராஜா), இணைப் பாடவிதான செயற்பாடுகள் (கந்தையா ஆனந்தராஜா), மனம் திறந்து பேசுங்கள் (என்.கதிர்காமத்தம்பி), வாழ்க நல்லாசான் (க.கிருஷ்ணபிள்ளை), காந்தி அடிகளின் கல்விச் சிந்தனைகள் (மா.பொன்னுத்துரை), வயது ஏறிப் போச்சு ஆகிய படைப்பாக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39172).

ஏனைய பதிவுகள்

Salle de jeu Un peu Notre pays

Content Casino de dépôt de 5 $ monopoly: L’achat Avec Bonus Autres supports De Diction Allez Lorsque Maintenant Du Argent Effectif En compagnie de Votre

16065 யோகமும் இயற்கையும் : இந்திய யோக மரபு, இயற்கை வேளாண்மை, சூழலியல் குறித்த சிந்தனைகள் : சித்த வித்தியா விஞ்ஞானம்- தொகுதி 1.

அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன் (மூலம்),வி.விமலாதித்தன் (தொகுப்பாசிரியர்), மா.ஜெயசீலன் (பதிப்பாசிரியர்). கொழும்பு: வி.விமலாதித்தன், செயலாளர், சித்த வித்யா விஞ்ஞான சங்கம்- இலங்கை, 1வது பதிப்பு, மே 2021. (தமிழ்நாடு 636302: தமிழி பதிப்பகம்,