12456 – உடுப்பிட்டி மகளிர் கல்லூரி 125ஆவது ஆண்டு விழா மலர் 1868-1993.


ச.வேலுப்பிள்ளை (மலராசிரியர்). பருத்தித்துறை: உடுப்பிட்டி மகளிர் கல்லூரி,
உடுப்பிட்டி, 1வது பதிப்பு, மே 1995. (பருத்தித்துறை: குமார் அச்சகம்).


(38), 138 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×22 சமீ.

1993ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் திகதி தனது நூற்றிருபத்தைந்தாவது
அகவையைக் கொண்டாடியதை முன்னிட்டு உடுப்பிட்டி மகளிர் கல்லூரி
வெளியிட்டு வைத்திருந்த சிறப்பிதழ் இதுவாகும். போர்ச் சூழலில் தமது பழைய ஆவணங்களையும் கட்டிடங்களையும் பெருமளவில் இழந்துவிட்டிருந்த இக்கல்லூரி, சிலகாலம் இடம்பெயரவேண்டிய சூழலும் ஏற்பட்டிருந்தது. வரலாற்றாவணங்களை இழந்தும், தீவிர முனைப்புடன் தமது பாடசாலையின் வரலாற்றைமீளவும் ஆவணப்படுத்தும் முயற்சியாக இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது.ஆசிகளும் வாழ்த்துக்களும், பழைய மாணவர் சங்கச் செயலாளர் அறிக்கை,அன்னையின் வாழ்வும் வரலாறும், நயப்பிற்கும் நன்றிக்குமுரிய சிற்பிகள்,இன்றைய அதிபர் திருமதி இரஞ்சிதம் குட்டித்தம்பி, சிறப்பு ஆக்கங்கள், நினைவுகள்பழையன ஆனால் பசியன, 125ஆவது ஆண்டு ஞாபகார்த்த மலர்ப் போட்டிகள்,மாணவர் ஆக்கங்கள், அன்னையின் 125ஆவது அகவை ஆரம்ப நிகழ்வுகள்,அதிபர்-ஆசிரியர்-ஊழியர் 1993, அஞ்சலி, மதிப்புரை: திரு ஆர். எஸ். நடராசா,நன்றிகள் ஆகிய தலைப்புகளில் இம்மலர் ஆக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத்தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17025).

ஏனைய பதிவுகள்

Beste Online Casinos 2024

Content Sie Fragen Sich, Wie Sie Auf Ihren Bonuscode Ohne Einzahlung Zugreifen Können? Was Sind Bonuscodes Ohne Einzahlung? Unterwegs Spielen In Casinos Ohne Lizenz Diese