கே.ஆர்.விக்டர் (பொறுப்பாசிரியர்), அ.டிலோஜன் (இதழாசிரியர்). கொழும்பு 4: தமிழ் இலக்கிய மன்றம், புனித பேதுரு கல்லூரி (St. Peter’s College), 1வது பதிப்பு, மார்ச் 2000. (கொழும்பு 12: ரஜனி பிரின்டர்ஸ், நுபு 2, மத்திய வீதி).
204 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ.
04.03.2000 அன்று புனித பேதுரு கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றம் ஒழுங்கு செய்திருந்த கலைவிழாவின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர். இவ்விழா மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களது தலைமையில் நடைபெற்றது. மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் சிறு கட்டுரைகளுடனும், பாடசாலை அமைப்புகளின் அறிக்கைகள், ஆசியுரைகளுடனும் இம்மலர் வெளியிடப் பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22335).