12462 காவலூர் புனித அந்தோனியார் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் இலங்கைக் கிளைச் செய்தி ஏட்டின் ; வெள்ளிவிழா மலர் 1978-2003.

எஸ்.எம்.ஜோசெப் (மலராசிரியர்). ஊர்காவற்றுறை: பழைய மாணவர் சங்கக் கிளை- தென் இலங்கை, புனித அந்தோனியார் கல்லூரி, 1வது பதிப்பு 2003. (கொழும்பு 13: லட்சுமி அச்சகம், 195, வூல்பெண்டால் வீதி).

(20), 37 பக்கம், புகைப்படங்கள், அளவு: 26×20 சமீ.

காவலூர் (ஊர்காவற்றுறை) புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவர் சங்க- தென் இலங்கைக் கிளையினர் 1978இல் செய்தி ஏடொன்றினை கைற்ஸ் அந்தோனியன் (Kayts Anthonian)) என்ற பெயரில் தொடங்கியிருந்தனர். பாடசாலை நடவடிக்கைகளை பழைய மாணவர்களிடையே தொடர்ச்சியாகக் கொண்டுசேர்த்து அவர்களை ஒரு பிணைப்புக்குள் வைத்திருந்து, ஒரு குடும்பமாக உணரச்செய்யும் பணியை இவ்விதழ் செய்துவந்தது. அதன் வெள்ளிவிழா ஆண்டு 2003இல் அமைவதன் நினைவாக இச்சிறப்பிதழை அவர்கள் வெளியிட்டுள்ளனர். இதில் மலர் ஆசிரியர் உரை, தலைவரின் செய்தி, யாழ்.ஆயரின் வாழ்த்துச் செய்தி, அதிபரின் செய்தி, தாய்ச்சங்கத்தின் வாழ்த்து, காவலூர்க் கண்ணின் மணி, Concernnot only in Plucking Fruits, Concept of Alma Mater, Memories of of a Septuagenarian,S.A.E.Ratnarajah-a Vetaran Principal, S.A.Eரெட்ணராஜா அவர்களின் மறைவுக்கு கொழும்புக் கிளையின் அனுதாபச் செய்தி, இறையியல்துறை புலமையாளன், அணையாத தீபம், நல்லாசிரியன் நடராசன், செயற்திறனுக்கு ஒரு மரியநாயகம், மேன்மையுறு காப்பாளர் திரு. து.கு.ஜெகராஜசிங்கம், பிறந்த பதியினும் சிறந்த தொன்றில்லை, உயர்திரு இ.நடராசா அவர்களின் சேவை நலம், எம் இளமையில் நாம் மதிக்க மறந்த ஜீவன்கள், தாய்ச்சங்க நடப்பாண்டு நிர்வாகிகள், திருமண வாழ்த்து, Why not a Swimming Pool, கல்லூரிப் புளியமரம் பேசுகிறது ஆகிய 22 ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 42019).

ஏனைய பதிவுகள்

Via Prepaid Kreditkarte Piepen Anders sein

Content Slot dolphin cash: Wie Nachhaltig Dauert Die eine Geldanweisung? Bares Unter einsatz von Wise App Aufs Bankkonto Bepacken Kreditkarte Beantragen Bargeldeinzahlung Eingeschaltet Geldautomaten Einen