எஸ். டபிள்யூ.ஜோர்ஜ் (இதழாசிரியர்). கொழும்பு: கொழும்பு இந்துக் கல்லூரி, முகத்துவாரம், 1வது பதிப்பு, 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).
xxix, 64 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ.
கல்லூரியின் 25ஆவது ஆண்டு 2001இல் நிறைவுபெற்றதை முன்னிட்டு வெளியிடப்பட்ட வெள்ளிவிழா ஞாபகார்த்த மலர். ஆசிச் செய்திகள், மாணவர் விபரங்கள், மாணவர்களின் ஆக்கங்கள், என்பவற்றுடன் அறிவியல் ஆக்கங்களாக, இலங்கையிற் கல்வி சில அடிப்படைத் தகவல்கள் (சோ.சந்திரசேகரம்), கந்தன் வழிபாட்டில் காவடியாட்டம் ஓர் அறிமுகம் (மா.வேதநாதன்), வாழ்க்கைக் காலம் முழுவதும் கல்வி (மா.கருணாநிதி), இந்துக் கல்லூரிகளும் தமிழ்க் கல்வி மரபும் (க.நாகேஸ்வரன்), என்னுள் இருக்கும் ஈரமான பக்கங்கள் (டொமினிக் ஜீவா), மாறிவரும் சமுதாயத்தில் தொலைக்காட்சி சில குறிப்புகள் (ஆ.சிவநேசச்செல்வன்), 1950வரை ஈழத்துச் சிறுகதைகளின் முக்கிய பண்புகள் அவற்றை நிர்ணயித்த காரணிகள் (இ.க.சிவஞானசுந்தரம்), ஆரம்பக் கல்வியும் பெற்றோரும் (ஸ்ரீவித்யா ஸ்ரீரங்கநாதன்), இந்து சமய வாழ்க்கை முறையில் காணும் விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் (சந்திரா நகுலேந்திரன்), மனித ஆளுமை வளர்ச்சியில் விளையாட்டுக்களின் செல்வாக்கு (பொன். சிவஞானம்), வாழ்க்கைக்குப் பயனுறும் கணிதம் (அசோகமாலா ஜெயராமச்சந்திரன்) ஆகிய படைப்பாக்கங்களும் இடம பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40290).