சிறப்பு மலர்க்குழு. கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, மனிதவள அபிவிருத்தி, கல்வி, பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, டிசம்பர் 2003. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).
108 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×22 சமீ.
கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பிரிவினால் 14.12.2003 அன்று நடத்தப்பட்ட அகில இலங்கைத் தமிழ்மொழித் தினப் போட்டிக்கான பரிசளிப்பு விழாவின் பொழுது வெளியிடப்பட்ட சிறப்பு மலர். ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்தி களுடன், தலைநகரில் தமிழ்த்தின விழா, விபுலாநந்தரின் வழியில் தடம்பதித்த நடராஜானந்தா, தாயே, தமிழ் மொழியின் சிறப்பு, சமாதானம் பிறக்கட்டும், தமிழின் பெருமை, இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள், காலந்தோறும் தமிழ்மொழி, இலக்கியச் சொற்பொழிவு, பணியும் என்றும் பெருமை, ஒற்றுமையின்றேல் உயர்வில்லை, ஒளிமயமான எதிர்காலம், இலட்சியப் பயணம், விடியலைத் தேடி, அகில இலங்கை தமிழ்மொழித் தினப் போட்டிகள் 2003, மாகாண நிலைத் தமிழ்மொழித் தினப் போட்டிகளின் பெறுபேறுகள்ஆகிய விடயங்கள் பற்றிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33998).