12471 – செழுந்தமிழச் சிகரம் சிறப்புமலர்;2005 (அகில இலங்கைத் தமிழ் மொழித் தினம் ).

எஸ்.சிவநிர்த்தானந்தா (பொறுப்பாசிரியர்). கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, கல்வி உயர்கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 2005. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).

xx, 99 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×22 சமீ.

கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பிரிவினால் நடத்தப்பட்டு வருகின்ற அகில இலங்கைத் தமிழ்மொழித் தினப் போட்டிக்கான பரிசளிப்பு விழாவின்பொழுது வெளியிடப்பட்ட சிறப்பு மலர். சுவாமி விபுலாநந்தரின் நினைவாக ஆண்டுதோறும் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பெறும் இப்போட்டிகளில் எழுத்துப் போட்டி களில் பங்குபற்றியோரின் தேர்ந்த எழுத்தாக்கங்கள், குறிப்பாக பரிசுபெற்ற சிறார்களின் ஆக்கங்கள், கல்விமான்களது சிறப்புக் கட்டுரைகள், தேசிய மட்டத்தில் பரிசுபெற்ற சிறார்களின் பெயர்ப்பட்டியல் என்பன இடம்பெற்றுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37725.

ஏனைய பதிவுகள்